Home அழகு குறிப்பு கூந்தல் அழகு ஹேர் ஜெல் பயன்படுத்தும் முறைகள்

ஹேர் ஜெல் பயன்படுத்தும் முறைகள்

27

4d1b059c-ae24-4290-92c0-688082e052de_S_secvpf* முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். ஜெல் பயன்படுத்த முடியை முழுவதும் காய வைக்க கூடாது. ஓரளவு ஈரத் தன்மையுடன் இருக்குமாறு செய்ய வேண்டும்.

* சரியான ஜெல் தேர்வு: லேசான, நுரை போன்ற ஜெல் உங்களுக்கு அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும். நல்ல பளபளப்பான, தடிமனான ஜெல் முடியை மேன்மையாக்கும்.

* ஒரு துளி ஜெல்லை உள்ளங்கையில் எடுத்து தேய்க்க வேண்டும். முடியின் அளவை பொறுத்து பயன்படுத்த வேண்டும்.

* ஜெல்லை தடவ வேண்டும். நமது விரல்களின் மூலம் முடியின் ஸ்டைலை பொருத்து சீப்பை கொண்டு சீவ வேண்டும்.

* அதன் பிறகு ஹேர் டிரையர்(hair dryer) கொண்டு உலர்த்தலாம். அல்லது இயற்கையாக உலர்த்தலாம். கவனம் : முடியின் வேர் பகுதியில் ஜெல் படக்கூடாது.