Home சமையல் குறிப்புகள் ஸ்பைசி முட்டை மசாலா

ஸ்பைசி முட்டை மசாலா

26

4febacb9-8309-4d3e-90c8-4bdcacddf38d_S_secvpfதேவையான பொருட்கள்:

முட்டை – 5

வெங்காயம் – 1

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

கொத்தமல்லி

இலை – சிறிதளவு

வெங்காயத்தாள் – சிறிதளவு

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

கடுகு – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – ருசிக்க

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

:

• முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும்.

• தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

• வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

• அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

• பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

• தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

• சுவையான ஸ்பைசி முட்டை மசாலா ரெடி.