Home ஆரோக்கியம் வெள்ளத்திற்கு பின் பரவும் “மர்ம காய்ச்சல்”

வெள்ளத்திற்கு பின் பரவும் “மர்ம காய்ச்சல்”

20

night_fever_002வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிந்து விட்டாலும் அதன் பிறகு பரவும் தொற்றுநோய்கள் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
குறிப்பாக படுவேகமாக பரவும் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் ஏராளம்.
இந்த சமயத்தில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம், லெப்டோஸ்பைரோசிஸ் என்ற மருத்துவப் பெயர் கொண்ட எலிக்காய்ச்சல் மனிதர்களையும், விலங்குகளையும் தொற்றும் நோய்.
இந்த தொற்று, விலங்குகளிடம் இருந்து, குறிப்பாக எலிகள், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் இவற்றின் சிறுநீர் மூலம் பரவுகிறது.
மழைக் காலங்களில் இவற்றின் சிறுநீரும், சாக்கடைத் தண்ணீரும், மழைநீருடன் கலந்து வருவதால் மக்களுக்கு இந்த நோய் தொற்ற வாய்ப்புள்ளது.
மனிதர்களுக்கு வெட்டுக்காயங்கள், புண்கள் வழியே இந்த நோய் பரவும்.
அதிகமான தலைவலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை, மூட்டுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகம் குடிப்பது, உடல் இயக்க சோர்வு போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.
இந்த நோய் ரத்தத்திலும், நிணநீர்க்கணு, சிறுநீரகத்திலும், கணையத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனை முன்கூட்டியே கண்டுபிடிக்கவில்லை என்றால் பாதிப்புகள் அதிகம், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பதும் அவசியமாகிறது