Home சமையல் குறிப்புகள் வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

27

தேவையான பொருட்கள் :
Capture
நறுக்கிய காய்கறிகள் – அரை கப்
கோதுமை நூடுல்ஸ் – 1 கப்
வெங்காயம் – ஒன்று,
மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப,
பூண்டு – ஒரு பல்,
வெங்காயத்தாள் – ஒன்று
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நறுக்கிய காய்கறிகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து வேக வைத்து, வேக வைத்த தண்ணீர் 4 கப் எடுத்துக் வைத்துக்கொள்ளவும்.

* பிறகு நூடுல்ஸ் வேக வைத்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.

* கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பூண்டை நறுக்கி போட்டு வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி… காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.

* தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும்.

* கடைசியாக இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி… கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

* சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி.