என்னென்ன தேவை?
வெங்காயம்-2
எள் எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு1 தேக்கரண்டி
வெந்தயம்1 தேக்கரண்டி
கடலைபருப்பு அல்லது துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிதளவு
சாம்பார் பொடி -3 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
புளி-3எலுமிச்சை அளவு
வெல்லம்1/2 தேக்கரண்டி(விரும்பினால்) அரிசி மாவு1 தேக்கரண்டி
எப்படி செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய், கடுகு, வெந்தயம், கடலை பருப்பு அல்லது துவரம் பருப்பு, கறிவேப்பிலையை சேர்க்கவும். கடுகு, சீரகம், மற்றும் பருப்பு நிறம் மாறும் போது வெட்டிவைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். சூடான தண்ணீரில் புளியை கரைத்து வைத்துக்கொண்டு வெங்காயம் வதங்கியதும் அதில் புளிசாறை ஊற்றவும். பின்னர் உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், சேர்த்து கிளறிவிட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவேண்டும். நீங்கள் விரும்பினால் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். அரிசிமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து குழப்பில் போட்டு நன்கு கிளற வேண்டும். எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது குழம்பை இறக்கிவைத்து சாதம், நெய், குழம்பு ஊற்றி சூடாக பரிமாறவும்.