Home சூடான செய்திகள் வியர்வை வாசனை மூலம் மூடை அறியும் பெண்கள்…!!

வியர்வை வாசனை மூலம் மூடை அறியும் பெண்கள்…!!

25

sexnisha24gf-600ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாலியல் தேவை இருக்கும். பாலுணர்வு கிளர்ச்சி ஏற்படும்போது அதற்குரிய துணையுடன் இணைந்து தங்களின் ஆர்வத்தினை தணித்துக்கொள்ளும். விலங்குகள் தங்களின் தேவையை அதற்கேற்ப சங்கேத சப்தங்களை எழுப்பி உணர்த்தும். இணையின் உடலில் இருந்து எழும் வாசனையை மோப்பம் பிடித்து பின்னர் இணையுமாம். அதேபோல ஆணின் உடலில் எழும் ஒருவித வாசனை அவர்களின் மூடினை உணர்த்தும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்களுக்கு மோப்ப சக்தி சரியாக இருந்தால் சரியான நேரத்தில் தங்களின் துணையுடன் இணையலாமாம்.

ஆண்களின் மூடு பொறுத்து அவர்களின் உடலின் செக்ஸ் ஹார்மோன் சுரக்கிறது. இது வியர்வை மூலம் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையை இனம் கண்டறிந்து கொள்ளும் பெண்கள் தங்களின் துணைவரின் மூடுக்கு ஏற்ப தயாராகிவிடுகின்றனராம்.

சேலைக்கட்டும் பெண்ணுக்கு மட்டுமல்ல வாசனை ஆணுக்கும் இதுபோன்ற வாசனை எழுமாம். அதேபோல் மூச்சின் லயமும் பெண்ணுக்கு பிடிபடுமாம். இதனை வைத்துதான் பசியறிந்து பரிமாறுகின்றனர் நம் இந்திய பெண்மணிகள்.

இந்த ஆய்வுக்காக, 20 வயதுகளில் இருக்கும் 19 பெண்களிடம் இரு வகையான ஆண்களின் வியர்வை சாம்பிள்களைக் கொடுத்துள்ளனர். ஒன்று சாதாரணமான வியர்வை, இன்னொன்று செக்ஸ் மூடில் இருந்தபோது எடுக்கப்பட்ட வியர்வை சாம்பிள். உடலின் அக்குள் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வியர்வை வாசனையை எடுக்க அதிகம் மெனக்கெட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

ஆய்வில் பங்கேற்ற ஆண்களுக்கு முதலில் கல்வி சம்பந்தப்பட்ட, 20 நிமிடம் ஓடும் வீடியோவை பார்க்க வைத்துள்ளனர் அப்போது ஆண்களிடம் ஏற்பட்ட வியர்வை சாம்பிளாக சேகரிக்கப்பட்டது. பின்னர் அடுத்த 20 நிமிடம் செக்ஸ் படத்தை ஓட விட்டு பார்க்க வைத்தனர். அப்போது கிடைத்த வியர்வை செக்ஸ் மூடில் இருந்ததாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த வியர்வை சாம்பிள்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் கொடுத்தனர்.

ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், இந்த வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். பெண்கள் வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லையாம். ஆனால் அவர்களின் மூளை பல்வேறு விதமாக ரியாக்ட் செய்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான டெக்ஸாஸ் ரைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டெனிஸ் சென் கூறுகையில், சாதாரண வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது எந்தவகையான செயல்பாடுகளும் மூளையில் காணப்படவில்லை. அதே சமயம், ஆண்கள் செக்ஸ் மூடில் இருந்தபோது சேகரித்த வியர்வையை பெண்கள் நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளையின் பல இடங்கள் தூண்டப்பட்டது என்று கூறியுள்ளார்.எனவே மூடு பார்த்து முன்னேறுவதைப் போல வாசனைப் பார்த்து இனி ஆசையை புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.