Home ஆண்கள் விந்து முந்துதல், நரம்பு தளச்சி, ஆண்மை குறைவு, செக்சில் ஈடுபாடு இன்மை, கை பழக்கம், இதனால்...

விந்து முந்துதல், நரம்பு தளச்சி, ஆண்மை குறைவு, செக்சில் ஈடுபாடு இன்மை, கை பழக்கம், இதனால் ஏற்படும் பிரச்சனை

257

download (1)ஆண்மை குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டப்படுவதும் உழைப்பதும் சொல்லொன்னாத் துயரங்களைத் தாங்கிக்கொண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு என்றால் அதனை யாரும் மறுப்பவர்கள் இருக்கப் போவதில்லை.

எனினும், குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்குக் காரணம் பணம் மற்றும் குழந்தைகள் மட்டுமன்றி அதனைவிட முக்கியமான விஷயமொன்று உள்ளது. அது தான் தம்பதியினரின் இல்லற வாழ்வாகும். இவ்வுறவானது, திருப்திகரமாக இருப்பதாக கணவன், மற்றும் மனைவியால் ஆத்மார்த்தமாக உணரப்பட்டால் குடும்பத்தின் முழுப் பிரச்சினையும் சரியாகிவிடுவதுதான் உண்மை.

உடலுறவு விஷயம் கணவனால் அல்லது மனைவியால் அதிருப்தியாக உணரப்பட்டால் இதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது என்ற காரணத்தினால், கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் சிறு சிறு விஷயங்களையும் பெரிதுபடுத்தி மற்றும் அற்ப விஷயங்களுக்கெல்லாம் அடிக்கடி சண்டையில் முடித்துக்கொள்ளும் தம்பதிகள் சமூகத்தில் நிறைந்துள்ளனர் என்பது தான் உண்மை.

இதற்கு காரணம் சில நோய் குறைபாடாகவும் இருக்கலாம். இவையெல்லாம் குறைபாடா? அல்லது நோயா? என்று கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தெரியாமல் இருப்பதும் இன்னுமொரு பிரச்சினையாகும். பெண்களுக்கு ஏதும் குறைபாடு இருப்பின், அது மாதவிடாய் சுழற்ச்சியின் அடிப்படையில் அல்லது குழந்தைப்பேற்றின் அடிப்படையில் எளிதாக கண்டுபிடித்துக் விடலாம்.

இதுவே ஆண்களுக்கு இருப்பின்??? என்ற கேள்வி எழலாம். இவற்றைப் பற்றிய அறிவு பெண்களிடம் இல்லை என்றே கூற வேண்டும்.

இதன் வெளிப்பாடாக, மனைவியுடன் காரணமின்றி வாக்குவாதம் புரிதல், திட்டுதல், சில சமயம் அடித்தல், புதிதாக புகைபிடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுதல், மனைவியை சந்தேகப்படுதல், மனைவிக்கு கடுமையான முறையில் கட்டளையிடுதல், பரஸ்பரம் கலந்துரையாடாமை, அளவுக்கு அதிகம் கோபப்படுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.
உண்மையிலேயே இல்லற உறவு என்பது மற்றொரு சந்ததியை உருவாக்குவதை மட்டும் உள்ளடக்காது. மேலும், வாழ்வின் உச்ச ஆத்மார்த்தமான இன்பம், கவலைகளை மறத்தல், உளவியல் ரீதியான இன்பம், ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். இங்கே நாம் பார்க்கவிருப்பது ஆண் பாலியல் நோய்கள் பற்றியல்ல ஆண்களின் இல்லற உறவின் குறைபாடுகள் பற்றியாகும்.

உடலுறவில் ஆர்வம் இல்லாத்து: இதற்குரிய முக்கிய காரணங்கள்:

உடற் சோர்வு – இது நீரிழிவு நோய், ஆஸ்துமா, நீண்ட நாள் மலச்சிக்கல், இரத்தச் சோகை, உள மன சோர்வு, அதீத வேலைப்பளு போன்ற காரணங்களினால் உருவாகலாம்

விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவடைதல் – இது ஒரு நோய் நிலையாகும், சரியான சிகிச்சை எடுத்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்,

உறவை வேண்டுமென்றே தவிர்த்தல் – மாதவிடாய் நேரம், கர்ப்ப காலம், பாலூட்டும் காலம், இரவு வேலை, வெளிநாடு செல்லுதல் போன்ற காரணங்களினால் நேரலாம்

வேறு நோய்களினால் ஏற்படத்தக்க பக்க விளைவு – அதாவது, இருதய நோய்கள், வாயுக் கோளாறு, சிறுநீரக நோய்கள், நீர்கடுப்பு போன்றவற்றின் பக்க விளைவாகவும் இந்நிலமை ஏற்படலாம்.

மனம் / உளவியல் நோய்கள் – படபடப்பு, மன அழுத்தம் / சோர்வு, குற்ற உணர்வு, மனைவியுடன் கலந்துரையாடாமை போன்ற உளவியல் நிலைமைகள்

அதீத மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் – போதைக்கு அடிமையாதல்

அதிகப்படியாக.சுய இன்பம் காணுதல் – இன்று ஆண்களுக்கிடையில் அதிகமாக உள்ள பழக்கம்.

நீண்ட நேரம் பிரயாணம் செய்தல் – இதுவும் குறைபாடு ஏற்படுதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

கட்டுப்பாடின்றிய ஸ்கலிதம்: தூக்கத்தில் விந்து வெளியேறுதல், சிறுநீரில் விந்து வெளியேறுதல். அசாதாரணமாக சுய கட்டுப்பாடின்றி சிறுநீர் கழிக்கும் வேளையில், மலம் கழிக்கும் வேளையில், பாலியல் உணர்வின்போது மற்றும் பல சந்தரப்பங்களில் கட்டுப்பாடின்றி ஸ்கலிதமாகுவதாகும்.

இதற்குரிய காரணங்கள்:
1.அதிகளவு விந்து வெளியேற்றம்
2.விந்து அமிலத் தன்மையடைதல்
3.விறைப்படையாமை
4.அதீத உணர்வு – தேவையற்ற விடயங்களை அதிகமாக பார்த்தல்

விந்து விரைவாக வெளியேறுதல்: Pre mature Ejaculation PE
அதாவது இல்லற உறவுக்கு தயாராகும் வேளையில் அல்லது உறவின் தொடக்கத்திலேயே விந்து வெளியேறல் (5 நிமிடங்களை விட குறைந்த நேரத்திற்குள்).

இதற்குரிய காரணங்கள்:
1.சுய இன்பம் காணுதல்
2.பெற்றோரின் அதீத கட்டுப்பாடான வாழ்க்கை முறை
3.சிறு வயதிலேற்பட்ட மனவடு
4.தம்பதிகளுக்கிடையிலான அல்லது குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சினை
5.மது மற்றும் புகைபிடித்தல்
6.சில வகை மருந்துகளின் நீண்டகால பாவனை

மேற்கூறிய குறைபாடுகள் அனைத்தும் இன்பகரமான இல்லற உறவுக்கு ஊறு விளைவிக்கும் மேலும் குழந்தைப் பேரின்மைக்கு காரணமாக அமையும்.
இக்குறைபாட்டை நீக்க மனைவியின் ஒத்துழைப்பும், பொறுமையும் தேவை.

இக்குறைபாடு மனைவி, கணவனுக்கு இருப்பதாக உணரும் போது கணவனுடன் பேசி மன நல ஆலோசகரிடம் / மருத்துவரிடம் கட்டாயம் அழைத்துச் செல்லுதல் வேண்டும்.
தகுந்த மருத்துவ மற்றும் உள நல ஆலோசனைகள் மூலம், மிக விரைவாக இக்குறைபாட்டை முற்றிலுமாக நீக்கி இன்பகரமான இல்லற இனிமையை அனுபவிக்கலாம்.

ஓமியோபதி / சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரையில் குறைபாடாக இருக்கட்டும் அல்லது நோய் நிலையாக இருக்கட்டும் இவ்விரண்டிற்கும் தகுந்த தனித்துவமான வெற்றிகரமான சிகிச்சை முறைகள் உள்ளது.

மற்ற மருத்துவ முறைகளைப் போன்றல்லாது ஓமியோபதி / சித்த மருத்துவ முறையைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவரதும் உடல், உள நிலைமைகளுடன் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான முறையிலேயே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

எனவே, ஒவ்வொருக்கும் வழங்கப்படும் சிகிச்சைகளில் மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் உள்ளது. இதனால் பாலியல் உடலுறவு, இல்லற பிரச்சனைகள் போன்ற பல்வேறு நோய் நிலமைகளுக்கு வெற்றிகரமான பிரத்தியேகமான சிகிச்சைகள் ஓமியோபதி / சித்த மருத்துவத்தில் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது