Home ஆண்கள் விந்தணுக் குறைபாடுள்ள ஆண்களும் அப்பாவாகலாம்

விந்தணுக் குறைபாடுள்ள ஆண்களும் அப்பாவாகலாம்

54

115_content_p2-4-350x250இங்கிலாந்தில் ஒரு வித்தியாசமான பிரச்சினை தலை விரித்தாடி வருகின்றதாம். அதாவது அங்கு ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து விட்டதாம். விந்தணு இல்லாமல் பெரும் சிக்கலில் அந்தநாட்டு ஆண்கள் தவிக்கின்றார்களாம். பெரும்பாலான ஆண்களிடம் சக்தி குறைந்த விந்தணுவே இருப்பதாகவும் பிரிட்டிஷ் பெர்டிலிட்டி அமைப்பு எச்சரித்துள்ளது.

நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகிறது. இதன் காரணமாக விந்தணுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம் இங்கிலாந்து மருத்துவமனைகள்.

இது குறித்து பிரிட்டிஷ் பெர்லிட்டி அமைப்பின் தலைவர் டாக்டர் அலன் பேஸி கூறுகையில்; சில மருத்துவமனைகள் தரம் குறைந்த விந்தணுக்களையும் கூட வாங்கும் நிலைக்குப் போய்கொண்டிருப்பது கவலை தருகிறது. ஆனால் இது போன்ற தரம் குறைந்த விந்தணுக்களைக் கொண்டு கருத்தரிக்க முயலும் பெண்கள் பெரும் செலவுகளையும் கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும்.

நல்ல சக்திவாய்ந்த விந்தணுக்களை தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சுயமாக கருத்தரிக்க வைக்க முடியாத நிலையில் பல ஆண்கள் இருப்பதால் விந்தணுக்களை தானம் பெற முயல்கிறார்கள். ஆனால் விந்தணு தானம் தருவோர் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றார் அவர்.

ஆனால் இவ்வாறு விந்தணு பிரச்சினையுள்ள ஆண்களும் எந்தப்பிரச்சினையுமின்றி தந்தையாகும் தகுதியைப் பெறமுடியுமென்கிறார் டாக்டர் ரி.ஜி.சிவரஞ்சனி இனி அவர் கூறுவதைப் பார்ப்போம்.

குழந்தைப்பேறின்மைக்கு பெண்கள் மாத்திரம் காரணமில்லை . இதில் ஆண்களுக்கும் சமபங்குண்டு. பெண்களின் முட்டையில் பிரச்சினை ஏற்படும் போது சிகிச்சைகள் மூலம் அதனை சரி செய்வதைப் போன்றே ஆண்களின் விந்தணுவில் ஏற்படும் குறைபாடுகளையும் பல்வேறு சிகிச்சைகள் மூலம் நிவர்த்தி செய்யமுடியும்.
பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியை பொறுத்தே கரு உருவாதல் அடங்கியுள்ளது.

கரு உருவாதலில் ஆண்,பெண் என இருவருக்கும் சமபங்கு உண்டு. ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கையை பொறுத்துதான் அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவர்களா அல்லது கரு உருவாக்கக் கூடியவர்களா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களினாலும் விந்து கீழிறங்கல், சிறிய வயதில் அடிபடுதல், புகைத்தல், போதைபொருள் பாவனை போன்றவற்றினாலும் விந்தணுவின் உற்பத்தியிலும் எண்ணிக்கையிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

விந்தணுவில் ஏற்படும் கோளாறுகள் கூட விந்தணு எண்ணிக்கை, விந்தணுவின் தரம் அதன் இயக்கத்தை பாதிக்கும் விந்தணு சரியாக வெளியேறாவிடின் இதன் இயக்கம் கட்டுப்பாடில்லாமல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் அதிலும் விந்து வெளியேறாமல் இருத்தல், மலட்டுத்தன்மை, விறைக்காமல் இருத்தல் அல்லது விரைவாக விந்து வெளியேறுதல் கூட தாம்பத்தியத்தின்போது கரு உருவாதலில் பிரச்சினைகளை உண்டாக்கும்.

ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லீட்டர் வரையில் மாறுபடுகின்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மீட்டருக்கு 20 150 மில்லியன் வரையிலும் மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களானவை சரியான வடிவம் பெற்று முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும்.

இவற்றினை சீர் செய்ய உணவு முறை மிகவும் பிரதானமானது என கூற முடியாது. இருப்பினும் காபோவைதரேட் உணவு வகைகளை தவிர்த்து விற்றமின் பீ. உள்ள உணவுகளை உண்ணவேண்டும். அத்தோடு முளை தானியங்களை உண்ணவேண்டும். இதிலிருந்து அனைத்துவகை போஷாக்குகளும் எமது உடம்பிற்கு கிடைக்கிறது.

இந்த குறைப்பாட்டை நீக்க முதலில் என்டிஒக்சிடன்ட் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பின்னர் IUI,IVF,ICSI முறைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் முட்டையை வெளியில் எடுத்து கரு தரிக்க வைப்பது போன்றே விந்தணுவையும் வெளியே எடுத்து (Biopsi) பயோப்சி சிகிச்சை மூலம் முட்டையினுள் செலுத்தி கரு உருவாக்க முடியும். இது வெற்றிகரமான சிகிச்சை முறையாகும்.