Home ஆண்கள் விந்தணு பரிசோதனை

விந்தணு பரிசோதனை

28

images (11)பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல் வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற் பத்தியாவதில் பாதிப்பு இரு க்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவ ருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற் கொள்வது அவசியம்.
இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கரு த்தரிப்பிக்க தகுதி உள்ள வரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடி யும்.
பரிசோதனை மேற்கொ ள்ளும் விதம்:
இப்பரிசோதனைக்கு இரண் டு நாட்களுக்கு முன்னதாக வே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத் துக்குள் விந்துவை ஓர் அக ன்ற வாயுள்ள குடுவை யில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.
குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அது பற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரி விக்க வேண்டும்.
பரிசோதிக்கப்படுபவை
* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி. * விந்தணுக்களின் எண் ணிக்கை. * விந்தணுக்களின் ஊர் ந்து செல்லும் திறன். * இயல்பான உயிரணுக்கள். * பாக்டீரியா போன் றவை. * ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்
2 முதல் 6 மில்லி லிட்டர் அள விலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணு க்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத் தரிக்க தகுதியுடன் இருக்கி றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செ ல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறை பாடான அணுக்களாக கருதப்படும்.
விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.
விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டி ருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறை பாட்டுள்ளவையாக மாற்றி யிருக்கும்.
நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிர ணுக்களை அந்நிய பொ ருளாகக் கருதி, கொ ன்று விட்டிருக்க லாம். எனவே, விந்துப் பரிசோ தனைதானே என அலட் சியமாக நினைக்கா மல், பரிசோதனையை முழு ஒத்து ழைப்புடன் மேற்கொள்ள வேண்டு ம்.
சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்த ணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.
அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.