Home ஆண்கள் விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.

விந்தணு, கருமுட்டை முதிர்ச்சி அடையும் முன், உடலுறவு கூடாது.

26

images (2)உடல் நலம் குன்றிப்போன ஆணும், பெண்ணும் உறவு கொண்டால், அவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது. மீறி பிறக்கும் குழந்தை நோயுற்றதாகவோ, அல்லது குறைபாட்டுடனோ தான் இருக்கும். பெண், உடல் நலம் குன்றி இருந்தால், அவளது வயிற்றில் கருத் தங்காமல் பாதியிலேயே அழிந்து விடும். இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

அதாவது, ஆணும், பெண்ணும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடக்கூடாது. ஒரு அளவோடு தான் ஈடுபடவேண்டும் என்கிறது காமசூத்திரம். அப்படி அளவை மீறிக் கொண்டால், ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கரு முட்டைகளும் சரியான முதிர்ச்சி அடையாமல் போகும். முதிர்ச்சியற்ற விந்தணுக்கள், முதிர்ச்சியற்ற கரு முட்டைகளால், கருத்தரித்தல் நிகழ வாய்ப்பே இல்லை. அடிக்கடி உறவு கொள்ளும் போது, விந்தணுக்களும், கரு முட்டையும் முழுமையான வளர்ச்சி பெற ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. அவை முதிர்ச்சி அடையும் முன்பே அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணம், விலை மாதர்கள் தான். விலைமாதர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி, உடலுறவு கொள்வதால், அவர்களில் பெரும்பாலானோருக்கு,. குழந்தைப் பாக்கியம் இருக்காது. இதற்குக்காரணம், கரு முட்டை உற்பத்தியாகி, அவை முதிர்ச்சி அடையும் முன்பே உடலுறவில் அவர்கள் ஈடுபடுவது தான்.
சில தம்பதிகள், திருமணம் ஆகி ஓரிரு வருடங்கள் ஆகியும் குழந்தைப்பாக்கியம் இன்றி இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள், உடலுறவு கொள்ளும் போது ஒரு முறையைத் தவறாமல் கையாள வேண்டும். அது மிக எளிதானது தான். ஆனால், முக்கியமானது. சில ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது விந்து வெளிப்பட்ட உடனே, தங்கள் குறியை,. பெண் குறியிலிருந்து வெளியில் எடுத்து, தள்ளிப்போய் படுத்துக்கொள்வார்கள். ஆனால் இது தவறான முறை. இப்படிச் செய்தால், அந்தப் பெண் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு தான்.

இப்படிச் செய்யாமல், விந்து வெளிப்பட்ட உடனே குறியை எடுக்காமல், சிறிது நேரம் ஆண்குறியை பெண் குறியின் உள்ளே, விந்து முழுவதுமாக வடியும் வரை வைத்திருக்க வேண்டும். தவிர, ஆண், தனது குறியை வெளியே எடுத்த பிறகும், பெண், அந்த இடத்திலேயே குறைந்தது 10 நிமிடங்களாவது ஆடாமல், அசையாமல் படுத்திருந்து, கணவனின் விந்தணுக்கள் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான், கருப்பைக்குள் விந்தணுக்கள் சென்று, கருப்பையின் உள்ளே செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

இதின்றி, சிலர், உடலுறவு கொண்ட மறுநாளே கர்ப்பம் தரித்து விட வேண்டும் என எண்ணுவார்கள். இது, யாருக்காவது, எப்போதாவது நிகழலாம். எப்போதும் இது சாத்தியமல்ல. கணவன், விந்தை வெளியேற்றி எழுந்த பிறகு 10 நிமிடம், ஆடாமல், அசையாமல் பெண் படுத்திருந்தால் மட்டும் போதாது, உடலுறவு கொண்ட தினத்திலிருந்து, ஒன்றிரண்டு வாரங்களுக்கு, அந்தப் பெண் அமைதியாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். கடின வேலைகளைத் தவிர்த்து நல்ல ஒய்வு எடுக்க வேண்டும்.