Home சூடான செய்திகள் விஜய் படத்தில் முதல் முறையாக நடிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் படத்தில் முதல் முறையாக நடிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

24

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

ஏழாம் அறிவுக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. விஜய் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக இன்னுமொரு செய்தி வந்துள்ளது. படத்தின் இயக்குநர் முருகதாஸ், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவும் செய்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிப்பு என் தொழில் அல்ல. அதில் எனக்கு பெரிய ஈடுபாடும் இல்லை. விஜய் கேட்டுக்கொண்டால் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இது ஒரு சின்ன வேடம்தான். அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது,” என்றார்.

துப்பாக்கி படத்துக்கு மொத்தம் 5 பாடல்கள். ஒரு தீம் மியூசிக். விரைவில் ஆடியோ ரிலீஸ் அறிவிப்பு வரும் என்றார்.