Home பெண்கள் அழகு குறிப்பு வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!

27

சருமத்தை அழகாக மாற்றுவதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய காலம் முதல் வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் டார்ட்டாரிக் அமிலமும், சிட்ரிக் அமிலம் சிறிதளவும் காணப்படுகிறது.

சருமம் மென்மையாகும்

வெங்காயச் சாறுடன் வினிகரை சில துளிகள் கலந்து முகச் சுருக்கம் உள்ள இடங்களில் பூசி வரவும். தொடர்ந்து சில வாரங்கள் இதை செய்துவர முகச்சுருக்கம் மாறும்.சருமம் உலர்ந்து அரிக்கிறதா? இதனைப் போக்க வினிகர் சிறந்த செயலாற்றுகிறது. பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் 8 அவுன்ஸ் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்து குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.

உலர் சருமத்தை சீராக்கும்

முகம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அரை கப் தண்ணீரில் சிறிதளவு வினிகர் ஊற்றி முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதனை செய்துவர முகத்தில் வறட்சி நீங்கி பொலிவு பெறும்.

எண்ணெய் சருமம்

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் அரை கப் வினிகரை தண்ணீரில் கலந்து ப்ரிட்ஜ்ல் ஐஸ் கியூப்பில் ஊற்றி வைக்கவும். பின்னர் அதை எடுத்து முகத்தில் ஒத்தடம் கொடுக்க கோடையில் முகம் குளிர்ச்சியடைவதோடு முகத்தில் எண்ணெய் வடிவது கட்டுப்படும்.

பருக்கள் நீங்கும்

ஒரு ஸ்பூன் தேன், கொஞ்சம் கோதுமை மாவுடன், ஒரு ஸ்பூன் வினிகர் கலந்து பசை போல செய்து இரவில் உறங்கும் முன்னர் முகத்திற்கு பூசவும். மறுநாள் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பருக்கள் நீங்கி அழகு பெறும். முகச்சுருக்கமும் மாறும்.

உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

பாதம் மென்மையாகும்

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.

சரும புத்துணர்ச்சி

ஒரு டீ ஸ்பூன் வெள்ளை வினிகர், 3 டீ ஸ்பூன் பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான சரும டோனர் தயார். முகத்தில் இதைத் தெளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.