Home உறவு-காதல் வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!!

வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!!

37

03-1446537133-8thingsshoulddonebeforemarriagewithyourfuturepartner-600x450திருமணம் என்னும் ஆயிரம் காலத்து பயிரை அறுவடை செய்யும் முன்பு, நிலத்தை வலுவூட்ட வேண்டியது அவசியம். அதாவது, திருமணம் செய்துக் கொள்ளும் முன்பே, உங்கள் வருங்கால மனைவி / கணவனுடன் மனதளவில் நல்ல உறவு பாலம் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்ணை பற்றி ஆணும், ஆணை பற்றி பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டும். இது மனதளவிலும், உடல் அளவிலும் திருமண பந்தத்திற்கு தயாராக இருவருக்கும் பெருமளவில் உதவும். இது மட்டுமின்றி இருவரும் ஒளிவுமறைவு இன்றி பேசுதலும் அவசியம்.

இவற்றை எல்லாம் நீங்கள் வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட்டால் உங்கள் இல்வாழ்க்கை சுமுகமாகவும், சந்தோசமாகவும் பயணிக்கும்….

ஷாப்பிங் சண்டைகள்
திருமணத்திற்கு முன்பே உங்கள் வருங்கால மனைவியுடன் ஷாப்பிங் செல்வது அவருக்கு என்னவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என தெரிந்துக் கொள்ளல்லாம். முக்கியமாக உங்கள் பட்ஜெட்டில் எங்கெல்லாம் பின்னாட்களில் உதை விழுகும் என்றும் தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் பயணம்
ஒரு நாள் எங்காவது பயணம் சென்று வரலாம். இது மனம்விட்டு இருவரும் பேசிக் கொள்ள ஓர் நல்ல வாய்ப்பாக அமையும். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துக் கொள்ளலாம். இந்த பயணம் ஒருவரை பற்றி மற்றொருவர் ஆய்வு செய்யவும் கூட உதவும்.

கியூட்டா ஒரு காதல்
திருமணத்திற்கு பிறகும் கூட எல்லையில்லாமல் காதலிக்கலாம். ஆயினும், திருமணத்திற்கு முன்பே செல்லமாக பேசிக் கொள்ளும் அந்த அழகான காதல் அனுபவம் என்பது மிகவும் ரம்மியமானது. இதை மிஸ் செய்துவிட வேண்டாம்.

எதிர்காலத்தை பற்றிய திட்டங்கள்
திருமணத்திற்கு முன்பே, இருவரும் அவரவர் சம்பளத்தை வைத்து குடும்ப பொருளாதாரம் பற்றி திட்டமிடுதல், திருமணமான முதலில் இருந்தே இல்லறத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வெகுவாக உதவும்.

இரு வீட்டார் பற்றி தெரிந்துக் கொள்வது
திருமணத்திற்கு பிறகு, உங்கள் துணையின் வீட்டார் பற்றி அறிந்துக் கொள்வதற்கு பதிலாக, முன்பே உங்கள் துணையுடன் பேசி அவரவர் வீட்டார் பற்றி பேசி தெரிந்துக் கொள்வது உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

பிரச்சனைகள் குறித்து கலந்தாய்வு செய்தல்
உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, அலுவல் ரீதியாகவோ இருக்கும் பிரச்சனைகளை இருவருக்குள் கலந்தாய்வு செய்துக் கொள்வதால், உங்கள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கவும், அவரால் முடிந்த அளவு அதை தீர்த்து வைக்க உதவவும் ஓர் வாய்ப்பாக அமையும்.

இது ஆண்களுக்கு
பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது திருமணத்திற்கு பிறகு அவருக்கு உதவியாக இருக்கவும், சில சமயங்களில் உபத்திரவம் செய்யாதிருக்கவும் உதவும்.

இது பெண்களுக்கு
பொதுவாகவே ஆண்கள் எந்த விஷயத்தையும் லொட லொடவென பேச மாட்டார்கள், அப்படி யாராவது பேசினாலும் காதுக் கொடுத்து கேட்கவும் மாட்டார்கள். இதற்காக அவருக்கு உங்கள் மேல் பற்று இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ஒரு தயாரிப்பு குறைபாடு. அதே போல கோவம் இருக்கும் இடம் தான் குணமும் இருக்கும் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.