வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவை, அடிக்கடி பசி எடுத்தல் ஆகிய வற்றிலிருந்து விடுபட . . .
பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்…
சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள் ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது,அவை இரைப்பையை அரிக்க ஆரம்பி த்து, வயிற்றில்எரிச்சலை உண் டாக்குகிறது. இவ்வாறு வயிற்றி ல் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத்தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்கு ப் பல காரணங்கள் உள் ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப் பிடாமல் இருப்பது, வறு த்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறி ப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்ப து, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது கொழுப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடிய வையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலா ம்.
அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண் ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேர த்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வ து, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆக வே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அத னை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனை யை உண்டாக்கிவிடும். அதிலு ம் அமில சுரப்பைப் போக்குவத ற்கு எங்கும் செல்லவேண்டாம் . அதனை சரி செய்ய பல இயற் கை முறைகள் உள்ளன. அவை களைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப் படுத்தலாம்.
தண்ணீர்
தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டுகோப் பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.
முட்டைகோஸ்
இதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மோர்
மோருடன் ஒரு மேசை கரண்டி கொத்து மல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், அமில சுரப்பு க்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கிராம்பு
கிராம்பு மிகவும் காரமாகத்தான் இருக்கு ம். இருப்பினும் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அமில சுரப்பு பிரச்ச னையைப் போக்கலாம்.
தேன் மற்றும் ஆப்பிள்
உணவு உண்ணுமுன் ஒரு மேசை கரண்டி தேனுடன், இரண்டு மேசை கரண்டி ஆப்பிள் சாறு கலந்து குடித்தால், அமில சுரப்பு வராமல் தவிர்க்கலாம்.
புதினா சாறு
உணவைச் சாப்பிட்டு முடித்தபின், கொதிக்கு ம் நீரில் புதினா இலையைப்போட்டு கொதி க்கவிட்டு, பின்குளிர வைதது குடித்தால், அமில சுரப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக் கும்.
இளநீர்
பல மருத்துவ குணம் கொண்ட இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அமில சுரப்பு குணமடையும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வெள்ளரிக்கா யை தினமும் சாப்பிட்டு வந்தால், அமில சுரப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலை
அமில சுரப்பு, வாயுதொல்லை, குமட்ட ல் போன்றவற் றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவாரணி யாகும்.