Home சூடான செய்திகள் வயது கூடும் போது உடலுறவில் ஆர்வம் குறையுமா…!!

வயது கூடும் போது உடலுறவில் ஆர்வம் குறையுமா…!!

46

செக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. பெண்களுக்கு 50 வயதை நெருங்கும்போது மாதவிடாய் முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும்.

மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும்.

30 -லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.