Home சூடான செய்திகள் வயதில் உங்களை விட மூத்த பெண்களை கவர சில டிப்ஸ்…

வயதில் உங்களை விட மூத்த பெண்களை கவர சில டிப்ஸ்…

28

main-qimg-b8f64954eb23fb777bfc089bba68ac17 ஒரு இளைஞனாக, உங்களுடைய தனித்துவத்தை அறிந்து கொள்வதில் பெரும் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். ஆனால், உங்கள் வயது அல்லது உங்களை விட மூத்த பெண்ணை அணுகும் போது, தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். அவரிடம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதே போல் அவரிடம் பேசும் போது வழியாமல் இயல்பாக பேச வேண்டும்.

வயதில் உங்களை விட பெரிய பெண்ணை ஈர்க்க முற்படும் போது, அதிக அளவில் முதிர்ச்சி மற்றும் பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டும். அவரிடத்தில் உங்கள் பேச்சும் நடத்தையும் உங்களின் பக்குவத்தை எடுத்துக் காட்டுவதை போல் அமைய வேண்டும்

வயதில் உங்களை விட மூத்த பெண்ணை கவர என்னும் போது, நம்பிக்கை மற்றும் பிடிவாதத்துடன் முயற்சி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் பெண் சுலபமாக தோற்று போகும் ஆணை விரும்ப மாட்டார்.

ஆரம்ப கட்ட முயற்சிக்கு பின், அவரிடம் பேச தொடங்கி விட்ட பின்பு, ஆரம்பத்தில் உங்கள் மீதிருந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல விதமாக பேசி, உங்கள் மீதுள்ள ஆர்வத்தை நீட்டிக்க செய்யுங்கள். உங்கள் முன்னாள் அனுபவங்களை பற்றி பேசுங்கள். மிகவும் அந்தரங்கமான விஷயத்தை தவிர்த்து, அவரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேளுங்கள்.

ஸ்லாப்ஸ்டிக் வகை நகைச்சுவைக்கும் முதிர்ச்சியான நகைச்சுவைக்கும் இடையே ஒரு கோட்டை வரைந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசும் போது, அறிவு பூர்வமான, உங்கள் சொந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துங்கள். நகைச்சுவை என்றாலே பெண்கள் பொதுவாக விரும்புவார்கள். தேவையில்லாத உணர்வுகள் அல்லது கேவலாமான கடி ஜோக்குகளால் நிலைமையை மோசமாக்காதீர்கள். அது உங்கள் சந்திப்பின் சுவாரசியத்தை குறைத்து விடும்.

அவரை விட வயதில் நீங்கள் குறைந்தவர். அதை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்போதுமே வயதை பற்றிய பேச்சுக்களை எடுக்காதீர்கள். அதே போல் கல்லூரி போன்றவைகளை பற்றி பேசியும் அவரை வயதை இழுக்காதீர்கள்.

உடல் ரீதியான நெருக்கம் ஏற்படும் தருவாயை அடையும் போது, அதனை பற்றி ஆராய்வது அவசியமான ஒன்றாகும். நீங்கள் காட்டும் நெருக்கம் பக்குவமாகவும் காதல் உணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

அவரை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் கூட, பக்குவமில்லாமல் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளலாம் என்றில்லை. நல்ல பண்பாளனாக நடந்து, அவரை மிகுந்த மரியாதையுடனும் அக்கறையுடனும் நடத்துங்கள். முக்கியமாக காதல் உணர்வை அழகாக வெளிக்காட்ட வேண்டும். பேச்சிலும் ஆடை அணிவதிலும் கூட ஒரு நல்ல பண்பாளனாக காட்டிக் கொள்ளுங்கள்.