Home சமையல் குறிப்புகள் ரோஸ் ஃபலூடா

ரோஸ் ஃபலூடா

18

என்னென்ன தேவை?
ரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்த சேமியா – 2 டேபிள்ஸ்பூன்,
ஊற வைத்த சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன்,
வெனிலா ஐஸ்க்ரீம் – 1 கப்,
ஐஸ் பால் – 2 பெரிய கப்.

எப்படிச் செய்வது?

சப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. ஒரு பிளெண்டரில் பாதி ஐஸ்க்ரீம், பாதி ரோஸ் சிரப், ஐஸ் பால் ஊற்றி நன்கு அடிக்கவும். ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் சிறிது ரோஸ் சிரப்பை ஊற்றவும். அதில் ஊறிய சப்ஜா விதையைப் போடவும். மெதுவாக ஐஸ் பால் மிக்ஸை ஊற்றவும். வேகவைத்த சேமியாவை அரை டீஸ்பூன் அளவாக கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் போடவும். மேலே இன்னொரு சிறிய ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டுப் பரிமாறவும்