Home சூடான செய்திகள் ரொமான்ஸில் வெற்றி பெற சரியான ரூட் எது தெரியுமா?

ரொமான்ஸில் வெற்றி பெற சரியான ரூட் எது தெரியுமா?

15

aaaஒவ்வொரு உறவும் தித்திப்பான விஷயம்தான்… ஆனால் அந்த தித்திப்பு நாளடைவில் சற்றே நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தக்க வைப்பது… தித்திப்பை எப்படி நீடிக்கச் செய்வது… இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறார் ஒரு நிபுணர். ஒவ்வொரு முறையும் உங்களது துணையைப் பார்க்கும்போதெல்லாம் நீ செக்ஸியாக இருக்கிறாய், நீ ரொம்ப ஹாட் என்று சொல்லிக் கொண்டிருங்கள். உங்கள் இருவருக்குள்ளும் பூத்த நெருப்பு தொடர்ந்து சுழன்றபடியே இருப்பதை உணர்வீர்கள் என்று கூறுகிறார் இவர்.
ஒவ்வொரு இரவையும் ரொமான்டிக் நைட்டாக மாற்றுங்கள். சின்னதோ, பெரியதோ, திடீரென வந்ததோ.. எதுவாக இருந்தாலும் கிடைத்த செக்ஸ் வாய்ப்பை விடாதீர்கள்… மறக்க முடியாத அளவுக்கு அதை டைட்டாக கொண்டாடுங்கள். உங்கள் பேச்சில் துணையை ஜில்லிட வையுங்கள்.. நீங்கள் பேசப் பேச அவருக்குள் பூ பூக்க வேண்டும், பூத்த வேகத்தில் காய் காத்து குலுங்கிட வேண்டும்… காய் பழமாகி, பழம் கணிந்து உங்கள் மனதில் வந்து விழ வேண்டும். அதுதான் ரொமான்ஸின் முதல் வெற்றி…
உங்கள் துணையை எப்படியெல்லாம் கொஞ்ச முடியுமோ அப்படியெல்லாம் கொஞ்சுங்கள். மடியில் சாய்த்து கவிதை பாடுங்கள்.. மலர் முகத்தை கையில் தூக்கி செல்லமாக கிசுகிசுப்பாக பேசுங்கள்… காதுகளில் முத்தமிடுங்கள்… இதழ்களில் அமுதம் பருகுங்கள்.. கண்களில் இதழ் பதித்து ஐ லவ்யூ சொல்லுங்கள்… டான்ஸ் தெரியுமா.. கையைப் பிடித்து ஆடுங்கள்.. எடை குறைந்தவரா.. தூக்கி எடுத்து கொண்டாடுங்கள்.. இடுப்பு பிடித்து சின்னதாக சீண்டுங்கள்…
உங்களது ஒவ்வொரு அசைவிலும் செய்கையிலும் இளமை கொப்பளிக்க வேண்டும்… வேகம் கொந்தளிக்க வேண்டும்.. காதல் காட்டுத்தீயாக பற்றி எரிய வேண்டும்.. காமனை வெல்ல இந்த ரூட்தான் சரியானது… ஒவ்வொரு நொடியிலும் அவருக்கு உங்கள் முகம் மட்டுமே தெரிய வேண்டும்.. உங்களது பெயர் மட்டுமே அவருக்கு உச்சரிக்க முடிய வேண்டும்.. சுவாசத்தில் உங்களை மட்டுமே அவர் சுவாசிக்க வேண்டும்.. மூச்சு விடும்போதும், இழுக்கும்போதும் உங்களை மட்டுமே அவர் நினைக்க வேண்டும்..
இப்படி ஆதியும் அந்தமுமாக நீங்கள் அவருக்குள் புகும்போது, பிரகாசமாக எரியத் தொடங்கும் ஜோதி… காதலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. ரூம் போட்டெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.. முழுக்க முழுக்க அவரிடம் சரண்டராகி விடுங்கள். அவரை போஷித்து, பூஜித்துக் கொண்டாடுங்கள்… பிறகு பாருங்கள் அன்புச் சொரிதலை என்கிறார் அந்த நிபுணர்…