Home சமையல் குறிப்புகள் முளைகட்டிய காராமணி கிரேவி

முளைகட்டிய காராமணி கிரேவி

19

தேவையான பொருட்கள் :

வெள்ளை காராமணி முளைகட்டியது -1 கப்,
வெங்காயம்-2,
பச்சை மிளகாய்-2,
மிளகாய்த் தூள் -1 ஸ்பூன்,
பூண்டு-5,
சீரகத் தூள் -கால் ஸ்பூன்,
தனியாத்தூள்-1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை -ஒரு கைப்பிடி,
தக்காளி-1,
தேங்காய் துருவல்- 1 ஸ்பூன்
பெருங்காயம் தூள் – சிறிதளவு

தாளிக்க : பட்டை, சோம்பு, கிராம்பு,

செய்முறை :

• வேர்கடலையை ஊறவைத்து தேங்காய் துருவலுடன் அரைத்துகொள்ளவும்.

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

• கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும்.

• அதோடு அரைத்த வேர்க்கடலை விழுது,உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.