Home சமையல் குறிப்புகள் மீன் பிரியாணி

மீன் பிரியாணி

23

download (4)மீன் பிரியாணி
பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதை செய்து ருசித்துப் பாருங்களேன், புரியும்!

தேவையான பொருட்கள்:

மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக் கரண்டி

செய்முறை:

* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் “தம்” சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

பேரீச்சை சட்னி
அதே சட்னியா.. இத விட்டா வேற இல்லயா… என்று அலுத்துக்கொள்ளுகிறவர்கள் இந்த பேரீச்சை சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க… வித்தியாசமாக அதேநேரத்தில் ரொம்ப சுவையாகவும் இருக்கும்….

தேவையான பொருட்கள்:

பேரீச்சை – கொட்டை நீக்கியது 5-6
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – 2 டீ ஸ்பூன்

செய்முறை:

* புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

* பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.

* அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.

* வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்-ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள்.

* கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.

* இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

* வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்

பஞ்சாபி கரம் மசாலா பொடி
கரம் மசாலாவில் செய்த உணவில் மணமும் ருசியும் தனியா தெரியும்… இந்த கரம் மசாலவை நாம் வீட்லயே அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. பங்கு என்று குறிப்பிட்ட அளவு கப் அல்லது டம்ளர் அல்லது ஆழாக்கால் தேவைக்கேற்ற அளவில் அரைத்துக் கொள்ளலாம். ஜிப் லாக் கவரில் போட்டு பிரீசரில் வைத்தால் வாசனை கடைசி வரை ஒரே மாதிரி இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பட்டை – அரை பங்கு
லவங்கம் – அரை பங்கு
ஜாதிக்காய் – எண்ணிக்கையில் 4
ஏலக்காய் – 4 பங்கு
சீரகம் – ஒரு பங்கு
சோம்பு – 10 கிராம்
பிரிஞ்சி இலை – 5-6
மல்லி – அரை பங்கு
மிளகு – அரை பங்கு
கிராம்பு – அரை பங்கு
கல் உப்பு – 1 ஸ்பூன்

செய்முறை:

* இவை எல்லாவற்றையுமே தனித் தனியாக வெயிலில் உலர்த்திக் கொண்டு, மிக்சியிலேயே தனித் தனியாக பொடிக்கவும். நல்ல நைசாக பொடித்து வைக்கவும்.

* சிலர் இதிலேயே சுக்கு / இஞ்சியும் சேர்க்கிறார்கள். தேவையில்லை.. சமைக்கும் போது அரைத்து விட்ட இஞ்சியை சேர்த்துக் கொண்டால் போதும்.. இந்த கரம் மசாலா பொடியில் சேர்க்க தேவையில்லை.