ஆட்டா மாவு – 400 கிராம்
மைதா – 100 கிராம்
மிளகாய்த் தூள் – ஒரு மேசைக்கரண்டி
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 1/2 கோப்பை
பொரிப்பதற்கு:
எண்ணெய் – தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
தயார் செய்து வைத்திருக்கும் மாவை பூரி செய்ய தேவையான அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் வைத்து பூரிகளாக தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சில நிமிடங்களில் சீரக மணத்துடன் மிர்ச்சி பூரி தயார்.
மிளகாய் தூளிற்குப் பதில் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதை சப்பாத்தியாகவும் சுடலாம்.