Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்புத் தசையை வலுவாக்கும் டம்பெல் ஃபிளை பயிற்சி

மார்புத் தசையை வலுவாக்கும் டம்பெல் ஃபிளை பயிற்சி

26

449869379மார்புத் தசையை வலுவாக்க நினைப்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
தட்டையான பெஞ்சில் படுக்க வேண்டும். இரண்டு கைகளிலும் டம்பெல் உயர்த்திப் பிடிக்க வேண்டும். நம் முதுகும், தலையும் படுக்கையில் வசதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கால்களைத் தரையில் ஊன்றிய நிலையில் வைத்திருக்க வேண்டும். மெதுவாக கைமூட்டை பக்கவாட்டில் இறக்கிக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். ஆரம்பத்தில் எடை அதிகம் உள்ள டம்பெல்சைப் பயன்படுத்தாமல் குறைந்த எடையைப் பயன்படுத்துவதன் மூலம் தோள்பட்டைக் காயத்தைத் தவிர்க்கலாம். இந்தப் பயிற்சியும் மார்புத் தசையை வலுவாக்கும்.