Home பெண்கள் அழகு குறிப்பு மார்பக வளர்ச்சியைத் தூண்டும் கற்றாழை

மார்பக வளர்ச்சியைத் தூண்டும் கற்றாழை

14

ஆண், பெண் என்ற பாலின வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக உள்ள புறத்தோற்றம் மார்பகங்கள் தான். அதில் பெண்ணின் மார்பகங்கள் தான் ஆணின் இச்சையைத் தூண்டக்கூடிய முதல் காமப்பொருளாகவும் விளங்குகிறது.

அதனாலேயே தங்களுடைய மார்பகங்கள் எடுப்பான இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். இதற்காக சிலர் அறுவை சிகிச்சை என விபரீத வேலைகளைச் செய்துவிடுவதுண்டு. ஆனால் இயற்கையான முறையிலேயே மார்பகத்தின் வளர்ச்சியைத் தூண்ட முடியும்.

வறட்சியான இடங்களில் கூட வளரக்கூடிய தன்மையுடையது கற்றாழை. இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. சருமம், தலைமுடி என எல்லா வகையான பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

உள் மருந்தாகவும் வெளி மருந்தாகவும் செயல்படும் கற்றாழையானது மார்பகத்தின் வளர்ச்சியையும் தூண்டக்கூடியதாக இருக்கிறது. கற்றாழை ஜூஸைத் தொடர்ந்து குடித்து வந்தால் மார்பகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மார்பக வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருப்பது மிமிக் ஈஸ்ட்ரஜோன் என்னும் ஹார்மோன். இதைத் தூண்டும் ஆற்றல் கற்றாழைக்கு அதிகமாக உண்டு.

கற்றாழையில் அமினோ ஆசிட் மிக அதிக அளவில் உள்ளது. இது இயற்கையாகவே மார்பகத்தைப் பெரிதாக்கும் வேலையைச் செய்கிறது.

கற்றாழையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு காப்பர், ஜிங்க் மற்றும் பொட்டாசியமும் உள்ளன. இவை தசைகளை இறுக்கமாக வைத்திருக்கும். அதனால் ஃபிட்டான ஷேப்பில் மார்பகத்தை வைத்திருக்க முடியும்.

கற்றாழையின் சதையை எடுத்து நன்கு கழுவி, சிறுசிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். கற்றாழையை ஜூஸாகவும் அருந்தலாம்.