Home குழந்தை நலம் மாதவிடாய் சரியாக வந்தாலும் குழந்தை உண்டாக சாத்தியம் இருக்கா? கல்யாணமான 6வது மாதத்தில் தோழிக்கு வந்த...

மாதவிடாய் சரியாக வந்தாலும் குழந்தை உண்டாக சாத்தியம் இருக்கா? கல்யாணமான 6வது மாதத்தில் தோழிக்கு வந்த சந்தேகம்!

133

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் அவுட்டேட் ஆயாச்சு! கல்யாணத்திற்கு பிறகு குழந்தை கிடைப்பதே வரம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குழந்தை வரம் வேண்டி, கோவில் கோவிலாக ஏறி இறங்கியது போல, இன்றைக்கு டெஸ்ட் டியூப் பேபி சென்டர்களின் படிக்கட்டுகளை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. அப்படி போனாலும், இலட்சங்களுக்கு குறைவில்லாமல் தண்டம் அழுத பின்பே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உலகம் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், திருமணமான 6 மாதத்தில் என் தோழிக்கு, குழந்தை பாக்கியம் குறித்த பயம் வந்திருக்கிறது. மாத விடாய் சரியாக தான் வந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் வயிற்றில் இன்னும் கரு தங்கவில்லை என்கிறார். மாத விடாய் சரியாக வந்தால், எப்போது வேண்டுமானாலும், கரு தங்குமா? என்று சந்தேகத்துடன் கேட்டார். குழந்தை பாக்கியம் குறித்த பயம், தம்பதிகளை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை, தோழியின் பேச்சை வைத்தே அறிந்து கொண்டேன்.

பொதுவாக, கரு தங்கிவிட்டால், மாத விடாய் நின்று விடும். சரியாக மாத விடாய் வருகிறது என்றால், தோழிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தம்பதிகள் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்றால், தோழியின் கணவருக்கும் எந்த குறையும் இல்லை. கரு முட்டை கரு பைக்குள் வந்து, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள், ஆணின் வி ந்து, அதனுடன் இணைந்தாக வேண்டும். இதில் ஏதாவது தப்பு நடக்கும் போது மட்டுமே, கரு தங்குவது தள்ளிப்போகும்.

குறிப்பாக மாத விடாய் வந்த பிறகு, இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் தொடர்ச்சியாக தம்பதிகள் இணைந்தால் குழந்தை உண்டாக அதிக வாய்ப்புள்ளது. குளித்துவிட்டு, நிதானமாக எவ்வித பதற்றமும் இன்றி, இணைவது இன்னும் நல்லது. இருவரின் உடல்வாகு எப்படி என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றபடி உணவு உட்கொண்டு, இணைந்தால், மற்ற சிக்கல் எதுவும் வராது. பல பெண்களுக்கு வயிற்றில் கரு தங்காமல் போக, ஒழுங்கற்ற மாத விடாய் ஒரு காரணமாக இருக்கும். என் தோழிக்கு அந்த சிக்கல் இல்லை.

ஆறு மாதத்தில் கரு உண்டாகவில்லை என்று மனது தளர தேவையில்லை. திருமணமாகி ஆறு மாத காலத்தில் குழந்தை என்பது, குறுகிய காலத்தில் விளைச்சலை எதிர்பார்ப்பது போல, அது ஒரு சிலருக்கே அதிர்ஷ்டவசமாக அமையும். அதிகபட்சம் இரண்டு வருடம் வரை காத்திருக்கலாம். அதற்கு மேல் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை என்றால் மட்டும், மேற்கொண்டு அடுத்தகட்ட முயற்சிக்கு செல்லலாம். இடைப்பட்ட காலத்தில், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மனதார இணைவதே ஆரோக்கியமான குழந்தை உண்டாக வழிவகுக்கும்.