Home உறவு-காதல் மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

29

downloadவீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.