மராட்டிய மாநிலம் நாச்சிக்கில் திருமணமான 48 மணி நேரத்தில் மணமகள் கன்னித்தன்மையை சோதனையில் தோல்வியடைந்ததால் அந்த கிராமத்தை சேர்ந்த
சாதி பஞ்சாயத்து அந்த திருமணத்தை முறித்தது.
மும்பை ஊடகங்களின் தகவல் படி சாதி தலைவர்கள் என கூறப்படும் குழு மணமகனுக்கு திருமணத்திற்கு முதல் நாள் ஒரு வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்தனர். பின்னர் மணமகனின் முதலிரவு முடிந்ததும் அதை கொண்டுவரும்படி கூறினர்.
மணமகன் அது போல் படுக்கை விரிப்பை கொண்டுவந்து சாதி தலைவர்களிடம் காட்டி உள்ளார். ஆனால் அதில் எந்தவித ரத்த கறையும் இல்லை. இதை தொடர்ந்து சாதி பஞ்சாயத்து குழுவினர் மணமகள் கன்னிதன்மையற்றவர் என கூறி மணமகன் மணமகளின் உறைவை முறித்து கொள்ள அனுமதி அளித்து உள்ளனர்.
தகவலின் படி அந்த மணமகள் மாநில போலீஸ் பிரிவில் சேர தயாராகி வருவதாகவும். இதனால் சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல், மற்றும் கடின பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மணப்பெண் சார்பாக சமூக சேவகர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை நடந்த சாதி பஞ்சாயத்து கூட்டத்தில் பேசினார். ஆனால் எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் சாதி பஞ்சாயத்து மற்றும் ஊர்பஞ்சாயத்து எந்த வடிவிலும் செய்ல்படக்கூடாது என தடை செய்யப்பட்டு உள்ளது.