Home சமையல் குறிப்புகள் மட்டன் ஸ்டூ(Mutton Stoo

மட்டன் ஸ்டூ(Mutton Stoo

51

தேவையானவை :
Chettinad-Spicy-Chicken-jpg-814
மட்டன் – அரை கிலோ

காலிபிளவர் – 100 கிராம்

பச்சை பட்டாணி – 100 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 200 கிராம்

பட்டை – 2

லவங்கம் – 2

தேங்காய்ப் பால் – 2 கப்

கேரட் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 6

எண்ணெய் – 2 குழிக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. மட்டன் மற்றும் காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. மட்டன், காய்கறிகளைச் சேர்த்து, இடித்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி மட்டன் மற்றும் காய்கறிகளை வேக விடவும்.

3. கலவை வெந்து சுண்டிய பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும். ஆப்பம், இடியாப்பம், தோசை ஆகியவற்றிற்கு இந்த `ஸ்டூ’ தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.