Home சூடான செய்திகள் பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

52

ஆண்களின் வக்கிரமா?

பெண்கள் உடை அணியும் முறையா?

குமுதம் சினேகிதியில் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் பெண்கள் சொன்ன சில கருத்துகள்.

1. இரண்டு அர்த்தம் சொல்லும் வாசகங்களை மார்பில் அணிந்து அடுத்தவர் பார்வைக்கு அளிப்பது யார்க் குற்றம்?. இது பாலியல் தொந்தரவுகளை தாம்பூலம் வைத்து அழைப்பதாகாதா?.
2. பல பெண் குழந்தைகளின் பெற்றோரே தம் பெண்கள் இறுக்கமான மற்றும் உடலழகை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதுடன் பெருமையும் படுகின்றனர். இந்த நிலைக்கு ஆண்களை குறை சொல்லுதல் இரண்டாம் பட்சமாகிவிட்டது.
3. புடவை கட்டினால் லோ நெக் ஜாக்கெட், சுடிதார் போட்டாலோ துப்பட்டாவை ஒழுங்காகப் போடுவதில்லை. இல்லையென்றால் ஜீன்ஸ், டீ சர்ட் இப்படி பண்ணினால் ஒழுங்காய் இருக்கும் ஆண்கள் கூட சபலப்படதான் செய்வார்கள்.

 

இதில் எழுபத்தி இரண்டு சதவீதப் பெண்கள் பெண்களுடைய உடையின் மீதான தவறை சுட்டி காண்மித்திருக்கின்றார்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உடைகளிலிருந்து பாட்டிகள் போட்டிருக்கும் உடைகள் வரை பெண்களே தவறுகள் செய்கின்றார்கள் என்கிறது ஒரு தரப்பு.

இல்லை எப்படி ஆடை அணிந்து வந்தாலும் ஆண்கள் மோசமாக தான் நடந்து கொள்வார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. எல்லா ஆண்களும் சபலப் பிரியர்கள், அவர்கள் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றார்கள். பெண்கள் ஆடை விசயத்தில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அந்த சந்தர்ப்பம் கிடைக்கின்றது. சிலர் அதை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலர் சந்தர்ப்பம் கிடைத்தும் சமூகத்தின் தண்டனைக்கு பயந்து தவறு செய்யாமல் இருந்து விடுகின்றார்கள்.

ஆனால் சந்தர்ப்பங்கள் பலவும் சமூகத்தின் மீதான பயத்தினை போக்கி விடுகின்றது என்பதே உண்மை. வன்புணர்ச்சி எனபடும் கற்பழிப்புகள் பல நடப்பதற்கு சமூகமும் ஒரு முக்கிய காரணம் என்றே எனக்கு படுகின்றது. ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை ஆண் காணும் போது அவனுக்கு இச்சை உண்டாதல் இயற்கை. அது தவறென்று சமூகம் சொன்னாலும், சட்டங்கள் சொன்னாலும் இயற்கை அனுமதிக்கின்றது. அதனால் மட்டுமே இன்றுவரை ஏகப்பட்ட பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு இருக்கின்றது.

இடுப்பு தெரிய சேலை, மார்பு தெரிய டீசர்ட், துப்பட்டா இல்லாமல் சுடுதார், பின்புறம் தெரியும் ஜீன்ஸ் என எல்லாவற்றையும் பெண்கள் அதில் குறிப்பிட்டுவிட்டாலும், முக்கியமான ஒரு ஆடையை மறந்துவிட்டார்கள் அது இரவு உடை நைட்டி. உடலழகை அப்படியே காட்டிடும் இந்த உடைய இரவு அவர்கள் வசதிக்காக அணிந்து கொண்டிருந்த பலரும் பகல் நேரங்களிலும் அணிந்து வெளியே பவணி வருகின்றார்கள்.

ஆடை அணிவதில் தவறு செய்துவிட்டு பாலியல் வன்முறைக்கு அழைப்பு வைக்கும் பெண்களுடன், அந்த அழைப்பிற்கு செவி சாய்க்கும் ஆண்களை குற்றவாளியாக ஆக்கி விடுகின்றார்கள் பெண்கள். இதைப் பெண்களே ஒப்புக்கொண்டபின் நமக்கு என்ன வேலை.

இதற்கு சான்றாய் ஒரு இந்து மதக் கதை –

மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கும், அசுர்ர்ரகளுக்கும் மாறி மாறி ஏமாற்றி அமுதமும், திரவமும் கொடுக்கின்றார் விஷ்னு. அந்தப் பணி முடிந்த பிறகு அதே கோலத்தில் சிவனைப் பார்க்க செல்கின்றார். அகில லோகமும் தங்களை மறந்து மோகினியை ரசிக்கின்றது. அப்படி ஒரு அழகு. மோகினியை சிவன் பார்க்கின்றார். இது வரை இப்படியொரு அழகான பெண்ணை கண்டிராத சிவனுக்கோ மோகம் வருகிறது மோகினி மேல். தன்னுடைய ஆசையை மோகினியிடம் சொல்கிறார் சிவன். அந்த ஆசையை நிறைவேற்ற மோகினியும் தயாராகிறாள். சிவனும் மோகினியும் உடலுறவில் இடுபடுகின்றார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையையே ஐயப்பன் என மக்கள் வழிபடுகின்றார்கள்.

இந்தக் கதை சொல்வது மோகினியின் அழகை பார்த்த சிவனுக்கே மோகம் வருகின்றது. காமதேவனை எரித்தவனுக்கே ஒரு பெண்ணால் மோகம் உண்டாகுமானால் சாதாரண ஆண்கள் எம்மாத்தரம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கதை.

மார்பின் மேல் தெகிரியம் இருந்தால் தொடு, மிகவும் ஆபத்தான பகுதி, வெளியில் பார்ப்பதை விடவும் உள்ளே பெரியது என இரட்டை அர்த்த வசனங்களை எழுதிப் போகும் பெண்களுக்கு யாராவது வக்காலத்து வாங்க ஆள் இருக்கின்றார்களா?. இருந்தால் அவர்கள் 28 சதவீதம் பேரில் ஒருவர்.