இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன. இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில்
ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது. அந்தக் கால கட்டம் எது? பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது