Home உறவு-காதல் பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?

பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?

19

downloadஇன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது.
காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பது தான். அதிலும் அந்த நட்பை பார்க்கும் போது வரும் பிரச்சனை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும். இப்போது உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும்.
நமது சமுதாயத்தின் கண்ணில் இத்தகைய விஷயம் பட்டால், அது பல வழிகளில், கோணங்களில் நகரும். அத்தகைய நமது சமுதாயம், ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றியோ அல்லது திருமணம் செய்து கொள்ள போகும் இருவர் ஒரே வீட்டில் திருமணமாகாமல் வாழும் முறையை எல்லாம் பார்க்கும் போது கூட பெரிய விஷயமாக நினைக்காது. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் மட்டும் ஒவ்வொரு விதமான பேச்சு எழும்.
சரி, இப்போது உண்மையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய தோழன் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்று சிறிது பார்ப்போமா!!!
* பெண் தோழிகளை விட ஆண் தோழர்கள் இருந்தால், நிறைய சந்தோஷம் இருக்கும். எப்படியெனில் அவர்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் ஒரே வேடிக்கையாக இருக்கும்.
* ஏதேனும் அவசர உதவி என்றால் பெண் தோழிகள் கூட சில சமயங்களில் செய்யமாட்டார்கள். ஆனால் அதுவே ஒரு ஆண் தோழனிடம் சொன்னால், நிச்சயம் அந்த உதவி கிடைக்கும்.
* ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையில் தோழியாக நினைத்துவிட்டால், அது எத்தகைய சூழ்நிலையிலும் மாறாமல் இருக்கும். மேலும் அந்த நட்பிற்கு ஏதேனும் கலங்கம் ஏற்படும் வகை நேர்ந்தால், அவர்கள் அந்த நட்பிற்காக அவர்களை விட்டு விலக கூட முயல்வர்.
* அதிலும் ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு ஆண் தோழன் இருந்தால், இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஏதாவது நண்பர்கள் கிடைத்தால் கூட, அந்த இடத்தில் எந்த ஒரு பொறாமை, கோபம் போன்றவை வராமல் இருக்கும்.,…………..