Home பாலியல் பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

21

Sexual-Harassment-30-03-16-seithyworldவீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது இடங்கள் எனப் பல்வேறு சூழல்களிலும் பெண்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமான பிரச்சனை, பாலியல் தாக்குதல்கள். ‘நகர்ப்புறங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களில் 10 சதவிகிதம் பேர்தான், தனக்கு நேர்ந்தது பற்றி புகார் செய்கிறார்களாம். மற்றவர்கள் அதை வெளியில் சொன்னால் அவமானமோ, ஏதேனும் பிரச்சனையோ வந்துவிடும் என்று பயந்து மறைத்துவிடுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு.

இந்தச் சிக்கலான பிரச்சனையை எப்படித் தெரிந்துகொள்வது? இதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தவிர்ப்பது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உடன் பணிபுரிபவர், உறவினர், ஆசிரியர், மாணவர், நண்பர், முன்பின் அறிமுகம் இல்லாதவர் எனப் பாலியல்ரீதியான தாக்குதல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஒருவர் நேரடியாகத் தொட்டுச் செய்வது மட்டும் பாலியல்ரீதியான தொந்தரவு இல்லை. ஆபாசமாக கமென்ட் அடிப்பது, செய்கை காட்டுவது போன்றவையும் தொந்தரவுதான். வீட்டில் இருப்பவர்களைவிட பணிக்குச் செல்லும் பெண்களே பாலியல்ரீதியான தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். காரணம் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரிகள் எனப் பலரையும் சார்ந்து இருக்கவேண்டிய சூழல்.

இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்தாத நபர்களே குறைவு. செல்போனின் மூலமாகவே ஒருவரோடு ஒருவர் ‘சாட்’ செய்ய வழி இருக்கிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் பலர் தங்களின் குடும்ப விவரம், செல்போன் நம்பர் போன்றவற்றை ஈஸியாக விட்டுச்செல்கிறார்கள்.

இந்தத் தகவல்களை வைத்து சில ஆண்கள், பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத அறிமுகமற்ற ஆண்களிடம் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதே தெரியாத நிலையில் தங்களை பற்றிய தகவல்களைக் கொடுப்பது தேவையற்ற பிரச்சனைகளையே கிளப்பிவிடும்.

”பெண்களைப் போகப்பொருளாக நினைக்கும் ஆண்கள், குடிகாரர்கள், குற்றச்செயல்கள் செய்வதையே வாடிக்கையான நபர்கள், சமூக விரோதிகள், சாதாரண நபர்கள் என யார் மூலமாகவும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படலாம். வயது வித்தியாசமே இல்லாமல் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்கள்கூட இந்தச் சமூகத்தில் செய்தியாக வந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

இது போன்ற தொந்தரவுகள், பெண்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு அந்தத் தவறு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், அவர்களால் நிம்மதியாக எந்த வேலையையும் செய்ய முடியாமல், மன நோயாளியாகவே மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு மனப் பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை, நெஞ்சுவலி, கை, கால், தலைவலி உபாதைகள் போன்றவை ஏற்படலாம். எப்போதும்போல அவர்களால் உற்சாகமாக செயல்பட முடியாமல், எதையோ இழந்ததைப்போல இருப்பார்கள்.

தேவையற்ற பயம் இருக்கும். தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் குடும்பத்தினரும் உறவினர்களும் பேசி அவர்கள் மனதில் இருக்கும் பிரச்சனையைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த பயத்தில் இருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க மனநல மருத்துவரால் முடியும்.