Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களே நாற்பது வயதில் நகத்தைப் பாருங்கள்

பெண்களே நாற்பது வயதில் நகத்தைப் பாருங்கள்

22

b2695687-9f48-4d2d-8bd7-07d51523462d_S_secvpfவீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்களின் கைகள், விரல்கள், நகங்கள் பாதிப்படைகிறது. அழகாக விரல்கள் சில நேரங்களில் கறுத்து, சற்று முரட்டுத்தனமாகிவிடுகிறது. அவர்கள் சிறிது கவனம் செலுத்தினாலே கைகளையும், விரல்களையும் அழகாக பாதுகாத்துக்கொள்ளலாம்.

* தரமான, சவுகரியமான ஒரு செட் கிளவுஸ் வாங்கி சமையல் அறையில் வைத்துக்கொள்ளுங்கள். சமையல் வேலைகள் செய்யும்போதும், வீட்டு வேலைகள் செய்யும்போதும் அதை அணிந்துகொள்ளுங்கள். டிடர்ஜென்ட், வாஷிங்பவுடர், லோஷன்கள் பயன்படுத்தும்போதும், கார்டனிங் செய்யும்போதும் அந்த கையுறைகளை அணிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் அணியத் தொடங்கிவிட்டால் உங்கள் கைகளின் 50 சதவீத பாதுகாப்புக்கும், அழகுக்கும் உத்தரவாதமாகிவிடும்.

* நகங்கள்தான் கைகளுக்கு அதிக அழகைத் தரும். அதனால் அழுக்கு சேராத அளவுக்கு சுத்தமாக்கி, நகங்களை நன்றாக பராமரியுங்கள்.

* நகங்கள் குறைபாட்டுடனோ, அழகின்றியோ காணப்பட்டால் அதை நினைத்து வருந்தவேண்டியதில்லை. அழகு சிகிச்சை நிபுணர்கள் குறை தெரியாத அளவுக்கு அதனை மேம்படுத்தி அழகாக்கிவிடுவார்கள்.

* நகத்தின் வெளியே பூசக்கூடிய பலவிதமான ‘கோட்டிங்’குகள் உள்ளன. பேஸ் கோட், டாப் கோட், எனாமல் ஆகிய மூன்று விதங்கள் அதில் உள்ளன. நகத்தின் முனைப்பகுதியை மினுமினுக்கச் செய்வது பேஸ் கோட். அதிக தொந்தரவு தராத ஜெலட்டின் வகையை சார்ந்தது அது. செல்லுலோஸ் நைட்ரேட் என்ற அழகு ரசாயனப் பொருளில் பிக்மென்ட்டுகள் சேர்த்து நெயில் எனாமல் தயாராகிறது. பேஸ் கோட், நெயில் எனாமல் பயன்படுத்தும்போது பளிச்சென்ற அழகை மெருகூட்டித்தருவதற்காக டாப் கோட் பயன்படுத்தப்படுகிறது. இது நிறமற்றது. சூரிய ஒளிபட்டு நகத்தின் நிறம் மாறாமல் இருக்க சன்ஸ்கிரீனும் பயன்படுத்தலாம்.

* சிலர் எப்போதும் கைகளை கழுவிக்கொண்டே இருப்பார்கள். அதற்காக சோப்பை பயன்படுத்துவார்கள். அடிக்கடி சோப்பிட்டு கைகழுவினால் கை அழகு பாதிக்கப்படும். வீரியம் குறைந்த சோப் அல்லது ப்ரி கிளன்சர் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை கழுவிய பின்பும் கிரீம் பூசி, மசாஜ் செய்யவேண்டும்.

* ரிமூவர் பயன்படுத்தி பாலீஷை நீக்கம்செய்யும்போது கவனியுங்கள். அதிகமாக ரிமூவரை பயன்படுத்தும்போது நகத்தின் இயற்கைத்தன்மை மாறி, நகம் பலகீனமாகிவிடும். அதனால் ரிமூவரை தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.

* பெரும்பாலான நேரம் கைகளை நீரில் நனைத்து வேலைபார்ப்பவர் களுக்கு நகங்களின் ஓரம் சிவந்து, வீங்கி வலி தோன்றலாம். கவனிக்காமலே விட்டுவிட்டால் சீழ்பிடித்துவிடும். அதனால் தண்ணீரில் கைகளை நனைத்து வேலைபார்ப்பவர்கள் கைவிரல்கள் மீது அதிக கவனத்தைக் காட்டவேண்டும்.

* நகங்களின் ஆரோக்கியத்திற்கு ‘பயோட்டின்’ என்ற சத்து அவசியம். இது பப்பாளி, கேரட், வாழைப்பழம் போன்றவைகளில் இருக்கிறது.

* வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கைகளில் கருப்பு புள்ளிகள், நிறமாற்றம், சுருக்கம் போன்றவை தோன்றும். அவர்கள் இளம் சுடுநீரில் உப்பு போட்டு அதில் கைகளை சிறிது நேரம் முக்கிவைக்கவேண்டும். பின்பு கைகளை நன்றாக துடைத்துக்கொண்டு பப்பாளி சாறு அல்லது தக்காளி சாறு பூசி மசாஜ் செய்யவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். சருமத்தின் வறட்சியை போக்க, பழச்சாற்றை சருமத்தில் பூசவேண்டும்.

* 45 வயதுக்கு பிறகு கை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கைகளால் அதிக வேலைகளை செய்வதால், கை எலும்புகள் பலம்பெறும் விதத்தில் கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும். கைகளுக்கு தொடர்ச்சியாக அதிக நேரம் வேலைகொடுக்கக்கூடாது. எழுதும் போதும், கீபோர்டில் வேலை செய்யும்போதும் இடைஇடையே கைகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

* கைகளையும், நகங்களையும் பார்த்து உடலின் ஆரோக்கியத்தை கணக்கிடலாம். ஆரோக்கியமான மனிதரின் நகங்கள் இளம் பிங்க் நிறத்தில் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், நகங்கள் வெளிறத் தொடங்கிவிடும். நகங்களில் அசாதாரண நிலையில் நிறமாற்றங்கள் ஏற்பட்டால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

* சமையல் அறை வேலைகள் அனைத்தும் முடிந்த பின்பு தக்காளி சாறு, எலுமிச்சை சாறு கலந்து கைகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். கைகள் அழகாகும்.

* வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைப்பழத்தை பிசைந்து கூழாக்கி கைகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கை பளபளப்பாகும்.

* நான்கு தேக்கரண்டி பைனாப்பிள் சாறு, மூன்று தேக்கரண்டி பாதாம் எண்ணெய் கலந்து கைகளில் அதை பூசுங்கள். இழந்த அழகு மீண்டும் கிடைக்கும்.

* கைகளின் அழகுக்கு ஆரோக்கியம் தேவை. அதனால் கைகளுக்கும், விரல்களுக்கும் அவ்வப்போது பயிற்சி கொடுங்கள்.