பெண்களை உயர்த்திக்காடடும் உடைகள்
பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடை பாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான உடையைக்கூட உடுத்தத் தெரி யாமல் உடுத்து அதன் அழகையே குலை த்து விடுவார்கள்.
ஒரு சிலர் சாதாரண காட்டன் புடைவை யை கூட அழகாக உடுத்து அப்லாஸ் வாங்கிக் கொண்டு போய்விடு வார்கள். எந்த உடையை எங்கு உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவ தில்லை. நமக்கு என்ன உடை சரியாக இருக்கும் என்று தெரியாமல் பலர் இருக் கின்றனர் அவர்களுக்காகவே இந்த கட்டு ரை.
அம்சமாய் அணியலாம்
உடலை மறைக்கத்தான் ஆடை என்றாலும் உடல் முழுவதும் சுற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல ஆடை. அதிலும் ஒரு அழகியல் உண்டு. அதற்காக அங்கங்கள் தெரியும் அளவிற்கு குறைவான ஆடைகளை அணி யக்கூடாது. அது நம்முடைய நன்மதிப்பை குறைத்துவிடும்.
அதிகரிக்கும் அழகு
புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந் திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந் தெடுத்து உடுத்தினால் பெண்க ளின உருவ அமைப்பே புரட்சி கரமாக மாற்றிவிடக்கூடும். உதார ணமாக பெண்கள் அணியக் கூடிய புடவை யில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமை ந்தால் உயரமான பெண்கள் குள்ள மாக இருப்பது போன்ற பிரமை பார்ப் பவர்களுக்கு தோன்றும்.
புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள் ள மானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார் கள். எனவே நம க்கான உடை என்ன என்பதை தேர்ந்தெடுத்து உடுத்த வேண் டும். நண்பர்கள் சொல்லி விட் டார்களே என்று எடுப்பதோ, பிறருக்காக நமக்கு பொருத்தமில்லாத உடையை உடுத்துவதோ நமது அழகினை கெடுத்துவிடும்.
எங்கெங்கு என்ன உடை
வீட்டிற்குள் இருக்கும் போது பாதி நேரம் சமையலறையிலும், வீட்டு வேலை செய் யவும் சரியாகிவிடும். அதற்காக சரியி ல்லாத உடை உடுத்த வேண்டும் என்றில்லை. வீட்டி லும் பாந்தமாய் உடுத்தியிருந் தால் மனதிற் கும் இதமளிக்கும்.செய்யும் வேலையி லும் ரசனை கூடும்.
கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களு க்குச் செல்லும் போது மிதமான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக் கள் போட்ட புடவை அணிந்து செல்வது நலம்.
சூழ்நிலைக்கு ஏற்ப புடவை
அலுவலகங்களுக்கோ, பள்ளி கல்லூரி களுக்கோ செல்லும் பெண் கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோச மான ஆடைகளைத்தான் அணிய வே ண்டும் என்பதில்லை. கண்ணியமா ன தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நி லைக்கு ஏற்ற உடையை அணிந்து செல் வது மிகவும் அவசியம்.
இறுக்கமான உடைகளை தவிர்க்கலாம்
மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது சோளியின் கைகள் கூட மிகவும் பிடிப்பாக இல் லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது. பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக் கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.
புடவைக்குப் பொருத்தமான சோளி கள் பெண்களின் கைகளில் அணியக் கூடிய சோளிகளின் கைகளிலும் கழு த்திலும் லேஸ்களை வைத்துத் தைத் துக் கொண்டால் அவை என்ன வண் ணத்தில் புடவை அணிந்தாலும் அதற் கு பொருத்தமாக இருக்கும்.
பெண்களின் உடைகளும், பாலியல் வன்கொடுமைகளும்…
“பாலியல் கொடுமைகளுக்கு பெண்களின் உடைகளும் ஒரு காரணம்” என்பது பல காலமாக சொல்லப்படும் விஷயமே. விவா தத்திற்குரியதும் கூட. மதவாதி களும், மிதவாதிகளும் மோதிக் கொள் ளும் கருப்பொருள் கொண்டதும் கூட, யாரேனும் ஒரு பிரபலம் அப்படியொரு கரு த்தை சொன்னால், “எப்படி, அப்படி சொல் லலாம்” என்று எதிர்கேள்வி எப்போதும் எழுப்பப்படுகிறது. சொல்வதில் உண்மை உள்ளதா, இல்லையா என்கிற சிந்தனை வருவதற்கு முன்பே, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்று சொல்லி விடு வார்கள்.
மதவாதிகள் – ஒரு பெண்ணின் ஆடையை தீர்மானிப்பதற்கும், சமூக ப்ரக்ஜையுடன் ஒருவர் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது அடிமைப்படுத்துகிறது என்றால் பின்னது அக்கறை ப்படுத்துகிறது எனலாம். அது குறித்து ஆராய்வோம். காரணம், மீண்டும் ஒரு சர்ச்சை அம்மாதிரி எழுந்து அடங்கி உள்ளது.
“ஐதராபாத் மற்றும் நகரங்களில் பெருகி வரும் பெண்கள் பலாத்கார சம்பவங்களு க்கு பெண்கள் அணியும் ஆடைகள் மோச மாக இருப்பதுதான் காரணம்” என்கிற ரீதி யில் ஆந்திரமாநில காவல்துறைத் தலை வர் தினேஷ் ரெட்டி, கருத்து தெரிவித்ததாக டி.வி. சேனல் களில் வெள்ளிக் கிழமை செய்திகள் வெளியாகின.
இவரது கருத்துக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவி த்தன. “நாகரிக உலகில் இவருடைய கருத்து ஜீரணிக்க இயலாதது” என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிறகென் ன, வழக்கம் போல “நான் அப்படி சொல் லவே இல்லை” என்று ஜகா வாங்க வே ண்டியது தானே. எதிர்ப்பு கிளம்பியதும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து வெளி யிடப்பட்ட செய்திக் குறிப்பில், தனது கருத்தினை சில டிவி சேனல்கள் திரித் துக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.” ஒரு காவல்துறை அதி காரி ஏன் அப்படி சொல்ல வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா?
“நாகரிக உலகில் இவருடைய கருத்து ஜீரணிக்க இயலாதது” என் கிற கருத்தை ஒதுக்கி வைத்து விட்டு – இந்த விஷயத்தை வேறு சில வகையில் அலசி ஆராய்வோம். “யாரும் எப்படிப்பட்ட உடை வேண்டுமானாலும் உடுத்தலாம். அதை மறுக்க இயலாதுதா ன்” இருந்தாலும் உடை குறித்த விஷயங் களில் பிறரின் விமர்சன தலையீடு ஏன் இருக்கிறது என்பதை பார் ப்போம்.
எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருக் கும்போது பார்த்திருக்கிறேன். சற்றே கை லியை யாரேனும் தூக்கி கட்டி இரு ந்தால் – சற்று தொடை தெரிய கட்டினா லே பின்னாலேயே ரெண்டு போடு போடு வார்கள் -காவல் துறையினர். நான் பார்த்து இருக்கிறேன். “ஏன் சாத்த வே ண்டும்”. அவர் கைலி. அவர் தொடை. எப்படி கட்டினால் என்ன? எப்படி காட்டினால் என்ன? பெண்கள் கூ டும் இடத்தில் ஒரு ஆண் கண்ணி யமாக தான் உடை உடுத்தி இருக்க வேண்டும் என்பதனாலேயே. ஆனால் இன்றைக்கு, பொது இட த்தில் மார்பு தெரிய ஒரு பெண் உடை உடுத்தினால் கூட ஏன் என் று கேட்கக்கூடாது என்கிற அளவு பெண்ணுரிமை வளர்ந்துள்ளதில் மகிழ்ச்சியே.
தொடை தெரிய கைலி கட்டிய நிக ழ்வை வைத்தே ஒரு படத்தில் வடி வேலு காமெடி பண்ணி காவல் துறையிடம் அடி வாங்குவார். நான் டைப்ரைட்டிங் போன காலத்தில் பையன்களுக்கென்று எங்கள் ஆசி ரியர் சில கட்டுப்பாடுகள் வைத்திருப் பார் – சட்டையில் எல்லா பட்ட ன்களும் போட் டிருக்க வேண்டும். காரணம் எதிரெதி ரே பெண்கள் இருப்பார்கள். பைய ன்கள் கண்ணியமாக உடை உடுத்தி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில் லையே. ஜிம்னாஸ்டிக் செல்ப வர்கள் – நெஞ்சை நிமிர்த்தி கொண்டு, சட்டை மேல் பட்டன் போடா மல் இருந்தால் திட்டுவார். நாங்கள் ஏற்று கொள்வோம்.
மாணவிகளும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்தாலும் பெண் ஆசிரியைகள் கண்டிப்பார்க ள். இன்றைக்கு கல்லூரியில் மாணவர்கள் நலனுக்கென உடை கட்டுப்பாடு விதித் தால் – உடனே தொலைக் காட்சி யில் – “நீயா… நானா” என்று மோதி கொள்கிறார் கள். பொது இடத்து நாகரீகத் தோடு – அந்நாட்களில், வீட் டில் எப்படி என்றால், நாலைந் து குடித்தனங்கள் உள்ளது எங்கள் வீடு என்பதால் “ஒழு ங்கா லுங் கிய கட்டு. நாலைஞ்சு பொம்பளை பிள்ளைங்க இருக்கிற இடம். நாகரிகமா இருக்கணும்” என்பார்கள் அம்மா. எங்களுக்கு மட்டுமல்ல புத்தி மதி. பக்கத்து குடித்தனப் பெண்களுக்கும் தான். பெண்களின் உடை விலகி இருந் தால் கூட – இவர்களே உரிமை எடுத்து சரி பண்ணி விடுவார்கள்.
எந்த தவறுக்கும் நாம் காரணமாய் இரு ந்து விடக்கூடாது என்பதை தவிர வேறி ல்லை. ஆண்கள் வைக்கும் கவர்ச்சி உடை, மனம் கெடுதல் குறித்த கருத்து களுக்கு ஆணாதிக்க சிந்தனையின் வெளி ப்பாடு என்று சொன்னால் – அதே கருத்தை சொல்லும் பெண்களை என்ன வென்று சொல்வார்கள். இந்த பதினைந்து வருஷத்தில் எல்லாம் தான் மாறிவிட்டது. ஆடைகள் மட்டுமல்ல – மனதுகளும் தான்.
அன்றைக்கு அப்பா, அம்மா சொன்னதை கேட்டோம். இன்றைக்கு யாருக்கும் எதுவும் சொல்ல முடிய வில்லை. “நீ யென்ன சொல்றது. நா என்ன கேட் கறது” என்றாகிவிட்டது. கண்ணியமான உடை உடுத் துதல் என்பது ஒரு அடிப்படை விஷயம். அதை கூட ஒருவர் சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் – அது வெட்கக்கேடு.
ஆசிய நாடொன்றில் பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துவது அதிக ரித்ததால் – அரசாங்கம் அது குறி த்து (உடைக்கட்டுபாடு) ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்தது. பிறகு எதிர்ப்பின் காரணமாக விட்டு விட்டது. அரசாங்கத்திற்கு வேறு வேலையே இல்லை பாருங்கள். அதே நேரம் ஒருவருக்கு ஆபாச மாக தெரிவது – அடுத்தவருக்கு ஆபாசமற்றதாக தெரிகிற து. பார்வைக்கோளாறும், மனக்கோளாறு ம் யாருக்கு என்பதையும் தீர்மானிக்க வேண்டி உள்ளது.
கவர்ச்சியான உடை என்பதற்கான பின் விளைவுகள் என்னவென்று பார்த்தால் – அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் பிடிக்கும் வக்ரம் பிடித்தவர்களின் மொபைல் போன்கள்.
கவர்ச்சி என்பதை தாண்டி வேறு சில இறுக்கமான உடைகளால் உடம்புக்கு எத்தனையோ கேடு. ஜீன்ஸ் போன்ற உடைகளால் ஆண் மை குறை வு ஏற்படுகிற அபாயம் உள்ளது என்கிறது விஞ்ஞானம். நாம் ஒவ் வொரு விஷயத்திற்குமே – மதத்தின் கீழ் கட் டுப்படுகிறோம் அல்லது மருத்துவத்தின் கீழ் கட்டுப்படுகிறோம். சுய அறிவிற்கு வேலை கொடுத்து, “சரியா… சரியில்லையா” என்று கேட்டு அதன் கீழ் எப்போதும் கட்டுப்படுவதி ல்லை. அதனால் தான் வீண் சர்ச்சைகள்.