Home சூடான செய்திகள் பெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின்

பெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின்

37

09-woman-with-wine-300சிவப்பு ஒயின் குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள ஃப்ளோரன்ஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள் பெண்களின் உணர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனைக்காக 18 வயது முதல் 50 வயது வரை உடைய 800 பெண்களை தேர்வு செய்து மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

முதல் வகை பெண்களுக்கு தினமும் 2 டம்ளர் மற்றும் அதற்கு மேல் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது வகை பெண்கள் தினமும் ஒரே ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மூன்றாவது வகைப்பெண்கள் மது எதுவும் குடிக்காமல் இருந்தனர். சமீபத்தில் இந்த 3 வகை பெண்களிடம் 19 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் தினமும் 2 டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் அதிக செக்ஸ் ஆசை கொண்டவர்களாக மாறி இருப்பது தெரிந்தது.

தினமும் ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ஓரளவு ஈடுபாட்டுடன் இருந்தனர். முழுமையான மதுவிலக்குடன் இருந்த பெண்களுக்கு செக்ஸ் ஆசை எழவில்லை என்பது தெரியவந்தது.

சிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று நீண்டநாள் ஆய்வுக்குப்பிறகு முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

சிவப்பு ஒயின்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை வழக்கத்தை விட அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதுதான் செக்ஸ் ஆசையைத் தூண்டுவதாக அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது வெளிநாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிதான். நம் நாட்டு பெண்களுக்கு இது எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது தெரியவில்லை