Home பாலியல் பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?

பெண்களுக்கு உடல் உறவில் உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?

23

01 (1)புணர்புழையின் முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறையோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங்கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவதை உணரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளியோடு புணர்புழையில் வெளிப்படும். மூன்று முதல் 10 வினாடிக்குள் துடிப்புகள் வெளியாகும்போது பிற்பகுதி துடிப்பில் வேகம் குறையும். ஆர்வம் உள்ள பெண்களுள் சிலருக்கு 25 துடிப் புகள் 42 வினாடிகள் வரை நீடித்து இருக்கும். ஆண் உச்சநிலையில் விந்தை வெளியேற்றும் நேர அளவே புணர்புழையின் துடிப்பும் இருக்கிறது.

இதன் பிரதிபலிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பரவிப் படர்ந்து வெவ்வேறு குறிகளுடன் பிரதிபலிக்கிறது. முதுகை வளைத்து பிறப்புறுப்பை ஆணுறுப்போடு இணைப்பர். கை, கால்களை நீட்டி விரிக்கும்போது, முகம், கழுத்து, தோள் சதைகள் விரைத்து, முகம் விகாரமாகி உப்பி, கண் செருகி வலிக்குள்ளானது போல நினைவிழந்த நிலையடைந்து பெருமூச்சு விடும் போது ஆனந்தப் பரவச நிலையில் இருப்பர். மார்பும், அடி வயிற்று சதைகளும் விரைப்பு அடைவதைக் காணலாம். வியர்வை வெளியாகி தோல் பகுதி ஈரமடையும். அபூர்வமாக சிலர் காக்கை வலிப்பு வந்தவர் போன்றும், ஓலமிட்டும், கடித்துப் பிராண்டியும், திட்டியும் உச்ச நிலையில் விசித்திரமாக இருப்பர்.

பெண் உச்சநிலை இன்பத்தை அனுபவிக்கிறார் என்பது இளமைக் கால சூழ்நிலை, வளர்ப்பு முறைகளால் நிர்ணயமாவது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புது மனைவி உச்ச நிலையில் இன்பம் அடைய முயன்று பழக வேண்டியது அவசியமாகும். இதற்கு பல வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். மாறி வரும் சூழ்நிலையில் ஒரு சில பெண்கள் முதலிரவிலேயே கூட உச்ச நிலை இன்பத்தை அடைந்து விடுகின்றனர்.