பெண்களுக்கு உடலுறவின் போது வலி ஏற்பட ஒரு காரணமாக இருப்பது இயற்கையான லுப்ரிகேஷன் இல்லாமல் போவது. பெண்ணுறுப்பு வறட்சியாவதற்கு பல காரணங்கள் உள்ளது. கருத்தடை மாத்திரைகள், அழுத்தத்தைப் போக்கும் மாத்திரைகள் மற்றும் அலர்ஜிகளுக்கான மருந்துகள் போன்ற சில மருந்துகள் உங்கள் சருமத்தை வறட்சியாக்கலாம். மாதவிடாய் முடிவு காலத்தின் போது பெண்களுக்கு பெண்ணுறுப்பின் உட்பூச்சில் ஈரப்பதம் குறையும். மேலும் அரிப்பு உண்டாகி, உடலுறவின் போது வலியை ஏற்படுத்தும்.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு தண்ணீர் கலந்த லூப்ரிகண்ட் ஒன்றை பயன்படுத்தி அந்த இடத்தில் ஈரப்பதத்தை உண்டாக்குங்கள். மேலும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு பெண்ணுறுப்பை ஊக்குவிக்கும் காம விளையாட்டில் ஈடுபடலாம். இதனால் அங்கே தானாக லூப்ரிகேட் ஆகும். உங்கள் பிரச்சனைக்கு மருந்துகள் தான் காரணமாக இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கவும். இது பெண்ணுறுப்பு பகுதியில் வறட்சியை உண்டாக்கும்.
பெண்ணுறுப்பில் பூஞ்சை அல்லது ஈஸ்ட் தொற்றுக்கள் இருந்தாலும் கூட உடலுறவின் போது வலி ஏற்படும். இந்த தொற்றுக்களால் அரிப்பு, எரிச்சல் தன்மை, பெண்ணுறுப்பில் வறட்சி ஆகியவைகள் ஏற்படும். சில நேரங்களில் கர்ப்பவாயில் ஏற்படும் தொற்றினாலும் கூட உடலுறவின் போது வலி ஏற்படலாம். உடலுறவின் போது ஆணுறுப்பு ஆழமாக நுழையும் போது, பெண்ணின் கர்ப்பவாய் வரை செல்வதே இதற்கு காரணமாகும்.
உடலுறவின் போது சிலருக்கு இயற்கையாகவே வழு வழுப்பான திரவம் சுரக்காமைக்கு சில மருத்துவக் காரணங்களும் உண்டு. மருந்துக் கடைகளில் இதற்கெனப் பாவிக்கக் கூடிய பலவகை ஜெல் வகைகள் உள்ளன. தகுந்த மருத்துவ ஆலோசனையின் பின்னர் இதனைப் பாவித்துப் பலன் பெறுங்கள்