Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களுக்கு ஆரோக்கியம்-அரை மணி நேர உடற்பயிற்சி

பெண்களுக்கு ஆரோக்கியம்-அரை மணி நேர உடற்பயிற்சி

36

Poonamவீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கியத்திற்கு ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம். அவை எப்படி என்று பார்க்கலாம்……
* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்து அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள்.
* நடை பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் பருகுங்கள்.
* உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் அரை மணி நேரமும் கடுமையான பயிற்சி செய்யும் திட்டம் இருந்தால், முதலிலே ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் இரவில் 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், மறுநாள் விழித்து உடற்பயிற்சி செய்ய செல்லும்போது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் வயிறு காலியாக இருப்பது கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றதல்ல. அதனால்தான் ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு கடுமையான உடற்பயிற்சியை தொடரவேண்டும்.

* கடுமையான உடற்பயிற்சி பெண்களின் உடலுக்கு அவசியம் இல்லை. 20 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள் அல்லது மாடிப்படிகளில் நாலைந்து முறை ஏறி இறங்குங்கள்.
* பக்கத்து வீட்டு பெண்களையோ, உறவினர்களையோ உடன் அழைத்துச் சென்றபடி நடப்பது தப்பில்லை. பெண்கள் பேசிக்கொண்டே நடந்தால் அதன் பெயர் உடற்பயிற்சி அல்ல! ஊர் கதை பேசுதல்! உடற்பயிற்சியின்போது பேசாமல் கைகளை வேகமாக வீசி நடந்து செல்லுங்கள். நீங்கள் அரை மணி நேரமே உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதால் அந்த நேரத்தை முழுமையாக அதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.
* அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ செல்லும்போது குறுகிய தூரமே இருந்தால் அதற்கு வாகனப் பயணம் அவசியம் இல்லை. நடந்தே செல்லுங்கள்.