அதிக அளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவு அதிகரித்து வருவதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றமே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. கடந்த இரு நூற்றாண்டுகளில் இங்கிலாந்து பெண்களின் சராசரி மார்பக அளவு அதிகரித்துவிட்டதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் குடிப்பழக்கமும், லிப்ஸ்டிக்கும்தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பெண்களின் மார்பக வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஹார்மோன் ஆஸ்ட்ரோஜன். வாழ்க்கை முறையிலும், உணவு முறையிலும் ஏற்படும் மாற்றங்களினால் ஆஸ்ட்ரோஜன் சுரப்பது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்ட்ரோஜன் ஹார்மோனை சிதைத்து உடலில் இருந்து வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. குடிப்பழக்கத்தினால் கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஹார்மோனின் அளவு உடலில் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
இவை தவிர செயற்கையான ஆஸ்ட்ரோஜன் காரணமாக மார்பக அளவு அதிகரிக்கிறது. ஜெனோ ஆஸ்ட்ரோஜன்கள் எனப்படும் செயற்கையான இந்த ரசாயனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளிலும், லிப்ஸ்டிக்கிலும் காணப்படுகிறது. இவை மார்பக அளவு பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைந்த அளவு குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு தாய்ப்பால் மூலம் ஆஸ்ட்ரோஜன் வெளியேறுவது குறைந்து மார்பக அளவு அதிகரிக்கிறது. இதுவே புற்றுநோய்க்கும் காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள். இனிமேல் லிப்ஸ்டிக்கை கையில் எடுக்கும் முன்பாகவோ, மதுவை தொடும் முன்பாகவோ ஒரு நிமிடம் பெண்கள் யோசிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.