Home உறவு-காதல் பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!

பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!

21

10-1370870335-4-couple-600இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க.
நேர்மையா இருங்க
நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம்.
நகைச்சுவை உணர்வு
ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதுகாக்கும் தன்மை
எந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள்.
அழகும், அறிவும்
ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம்.
அன்பும், பாசமும்
அதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம்.
ஆரோக்கியம் அவசியம்
உணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம்.
இடைவெளி அவசியம்
எப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.
நட்பான ஆண்கள்
முதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும்.
ஓவரா சீன் போடாதீங்க
பெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.