ஆரோக்கியத்தைப் பற்றி அதிகமாக அக்கறை கொள்ளும் நாம் அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதால், நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும். ஆனால் அந்த பகுதியின் சுகாதாரம் பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது.
அந்தரங்கப் பகுதியின் சுகாதாரம் மிக முக்கியம். அதேசமயம் இதற்காக பலர் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்று சில தவறுகளையும் செய்கின்றனர். அந்தரங்க உறுப்புகளைச் சுத்தம் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டு பராமரிப்பது நல்லது.
நம்மில் பலருக்கு அந்தரங்கப் பகுதியில் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு இல்லாமல் எதையாவது செய்துவிடுகிறோம். இதனாலேயே அந்தரங்க பகுதியில் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் சந்திக்கின்றனர்.
நம்மில் பலர் குளித்து முடிந்த பின், அந்தரங்கப் பகுதியை துடைக்காமல், அப்படியே ஈரத்துடனேயே உள்ளாடையை அணிந்து கொள்வோம். இப்படி உலர்த்தாமல் உள்ளாடையை அணிந்தால், அந்தரங்கப் பகுதிகளில் பாக்டீரியாக்கள் பெருக ஆரம்பிக்கும்.
பலரும் தங்களுக்குப் பொருத்தமான ஆடையை அணிகிறேன் என்று, தங்கள் உடலை இறுக்கியவாறான உடைகளை அணிவார்கள். இப்படி அந்தரங்க பகுதியை இறுக்கமான ஆடையை அணிந்தால், அவ்விடத்தில் வியர்வை அதிகரித்து, ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் இதர தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே எப்போதும் அந்தரங்க பகுதியில் சற்று காற்றோட்டமாக இருக்கும் ஆடைகளையே அணிய வேண்டும்.
நறுமணம் நிறைந்த மிக்க சோப்புக்கள் உபயோகிப்பது அந்தரங்க பகுதியில் துர்நாற்றத்தைப் போக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நல்ல நறுமணமிக்க சோப்புக்களைக் கொண்டு அந்தரங்க பகுதியை அளவுக்கு அதிகமாக சுத்தம் செய்யாதீர்கள்.
அந்த சோப்புக்களில் நறுமணத்துக்காக சேர்க்கப்படும் கெமிக்கல்கள் கூட, அந்தரங்க பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தொற்றுக்களை ஏற்படுத்தும்.
பெர்ஃயூம் போன்ற வாசனை திரவியங்களை அந்தரங்கப் பகுதிக்கு மிக நெருக்கமான இடத்தில் அடிக்கக்கூடாது.
சுயஇன்பம் காண கண்டதை உட்செலுத்துவது உங்களுக்கு ஜாலியாக இருக்கலாம். ஆனால் அவை நோய்த்தொற்றுக்களை உண்டாக்கிவிடும். இதுபோன்ற செயல்களைத் தவிர்ப்பதும் கவனமாக இருப்பதும் மிக அவசியம்.