Home குழந்தை நலம் புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால் . . .

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால் . . .

20

543475_549168495116784_571558431_nஇன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும்
மேலேயும் கொட்டி ஒவ்வான்றாக தின்று கொண்டிருக்கும். ஆனால் இந்த உணவில் எத்த‍கைய ரசாயனக் கலவை இருக்கிறது என் பது உங்களுக்கு தெரியுமா? அந்த ரசாயன கலவையி னால் உங்களின் குழந்தைகளின் உடல்நிலையில் ஏற் படும் பக்க‍ விளைவுகளும் பின்விளைவுகளையும் பற்றி சிந்தித்திருப்பீர்களா?
உங்க குழந்தைகளை செயற்கை ரசாயன உணவு வகைகளுக்கும் பதப்படுத்த‍ப்பட்ட‍ உணவு வகை களுக்கும் குட்பை சொல்ல‍ வையுங்கள். அதற்கு மாறாக இயற்கையாக கிடைக்க‍க்கூடீய பழம், காய்களை சாப்பிட கொடுங்கள் இவையே குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக அமையும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் காய்களில் ஒன்று தான் இந்த புடலங்காய் ஆகும். இந்த புடலங்காய் காய் மட்டுமல்ல‍ அதன் இலைச் சாறு குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த இலைச்சாற்றினை காலையில் குழந் தைகள் குடித்து வருவதால் ஏற்படும ஆரோக்கிய பண்புகளில் ஒரு சில வற்றை இங்கு காண்போம்.
காலையில் குழந்தைகள் எழுந்ததும் பல துலக்கச் செய்து அதன் பிறகு புடலங்காய இலைச்சாற்றினை அவர்களுக்கு குடிக்க‍ பழக்குங்கள். குழந்தைகள் இந்த இலைச்சாற்றினை குடிப்ப‍தால், ஆரோக்கியம் பெருகும் மேலும் கக்குவான், இ ருமல் இருந்தால் அதுவும் வந்தசுவடே தெரியா மல் குணமாகும். மலச்சிக்கல்நீக்கி குழந்தை களுக்கு பசித் தூண்டும்.
அதுமட்டுமா அடிக்க‍டி புடலங்காய்சமைத்து குழந்தைகளுக் கு சாப்பிடக் கொடுத்து வந்தால் அவர்களது உடலில் ஏற்படும் தேவையில்லாத பருமன் குறைந்து ஆரோக்கியமான மெல்லிய தேகத்தை பெறுவார்கள்.