Home சமையல் குறிப்புகள் பீட்ரூட் ரைஸ்

பீட்ரூட் ரைஸ்

33

பீட்ரூட்-ரைஸ்தேவையான பொருட்கள்:

சாதம் – ஒரு கப்,
பீட்ரூட் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – கால் டீஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• பீட்ரூட்டை தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும்.

• ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் நெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

• அடுத்து அதில் சாதம் சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறவும்.