Home சமையல் குறிப்புகள் பீட்ரூட் சாதம்

பீட்ரூட் சாதம்

24

Captureதேவையான பொருட்கள்

சாதம் – 1 கப்
பீட்ரூட் – ஒன்று (சிறியது)
நெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – 3
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 2
உப்பு, கறிவேப்பிலை, முந்திரி, பிளம்ஸ் – தேவைக்கேற்ப

செய்முறை

* வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

* பின்பு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

* தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டை நன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும் போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

* பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

* பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதே அதில் சிறிது சிறிதாக சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்.

* டேஸ்டி & கலர்புல் பீட்ரூட் சாதம் ரெடி.