காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவுளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம்தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோலத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக்குள் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்துகிறது. காதலுக்காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பணிச்சூழலினால் ஏற்படும் மனஅழுத்தம் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நீரிழிவு, இதயநோய்கள் போன்றகளும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகளாகின்றன.
மதுகுடிப்பதாலும், புகைப்பிடிப்பதாலும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுவே உடல் பருமனடைகிறது. இதனால் இதயநாளங்களும் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற இதயநோயாளிகளின் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
மனஅழுத்தம் காரணமாக பாலியல் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருக்கும் எனவே இவர்கள் தயங்காமல் மருத்துவர்களை அணுகு ஆலோசனை பெறலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.
எப்பொழுது பார்த்தாலும் பணிச்சூழலில் சிக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இப்பொழுது ஐ.டி, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையில் சிக்கித்தவிக்கின்றனர். இதனால் இருபதிலிருந்து முப்பது வயதிற்குள்ளாகவே இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு தவிக்கின்றனர். பெரும்பாலான இளம் தம்பதியர் விவாகாரத்து வரை செல்வதற்கு இதுவே காரணமாகிறது. எனவே எப்பொழுது பார்த்தாலும் பிஸி பிஸி என்று உடலையும், மனதையும் வருத்திக்கொண்டிருக்காமல் ரிலாக்ஸ்ஆக தாம்பத்ய வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க என்கின்றனர் நிபுணர்க