Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பில் தோன்றும் மருக்களைப் போக்க இயற்கை முறையில் சிறந்த தீர்வுகள்!

பிறப்புறுப்பில் தோன்றும் மருக்களைப் போக்க இயற்கை முறையில் சிறந்த தீர்வுகள்!

58

இன உறுப்புகள் உள்ளெ அல்லது வெளிய சிறிய அளவில் சதை வளர்ந்து மரு போல தோற்றமளிக்கும். இது ஆண் பெண் இருவருக்கும் வரலாம். இதனை இனஉறுப்பு மரு (genital wart ) என்று கூறுவர்.
இவை ஹ்யுமன் பபில்லோமா வைரஸ்(Human Pappilloma Virus -HPV ) என்ற ஒரு வகை கிருமியுடன் தொடர்புடயவையாகும். இந்த கிருமியால் 100க்கும் மேற்பட்ட தொற்றுகள் ஏற்படும். அவற்றில் 30 வகை தொற்றுகள் இன உறுப்பை சுற்றியுள்ள பகுதியில் தோன்றும்.
இன உறுப்பு மரு என்பது பால்வினை நோயை சேர்ந்ததாகும். HPV வைரஸ் தாக்கப்பட்ட சில தினங்களிலோ அல்லது வாரங்களிலோ இதற்கான அறிகுறிகள் தோன்றும். இந்த வைரஸ் சருமத்தோடு சருமம் உராயும் போது பரவும். ஆகவே இந்த சமயத்தில் பாலியல் தொடர்பு ஏற்புடையது அல்ல . இந்த மருவால் எந்த வலியும் ஏற்படாது. ஆனால் அரிப்பு அல்லது வீக்கம் ஏற்படலாம். இந்த மரு, பாதிக்கப்பட்டவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கும்.
முறையான சிகிச்சை: இந்த மரு வந்தவுடன் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மருவின் தன்மையை பொறுத்து க்ரீம் அல்லது லோஷன் பரிந்துரைக்கப்படும். அல்லது கிரியோதெரபி மூலம் அந்த திசுக்களை அகற்றக்கூடும். அல்லது லேசர் போன்ற சிகிச்சை மூலம் மருவை முற்றிலும் அகற்ற கூடும். பொதுவான மருவிற்கு பயன்படுத்தும் க்ரீம்களை இன உறுப்பு மருவிற்கு பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சைகள் விரைந்த பலனை கொடுக்கும். இயற்கையான முறையில் இந்த மருக்களை போக்க முடியும் . அவற்றை பற்றிய தகவல் தான் இந்த தொகுப்பு.

க்ரீன் டீ : க்ரீன் டீ இன உறுப்பு மருக்களை போக்குவதில் சிறந்தது. க்ரீன் டீயில் பாலிபீனான் ஈ என்ற ஒரு சாறு இருக்கிறது. அதில் 10-15% பயன்படுத்தும்போது மருக்கள் பாதிப்பில் இருந்தவர்களில் அதிகமானோர் மருக்கள் குறைந்ததாக கூறுகின்றனர். இந்த க்ரீன் டீயில் செய்யப்பட்ட ஆயின்மென்ட்கள் தற்போது கிடைக்கின்றன.

வைட்டமின் ஏ : வைட்டமின் ஏ அல்லது பீட்டா கரோட்டின் சாறு போன்றவற்றை மருக்கள் மேல் ஒரு நாளில் சில முறை தடவலாம். குறிப்பாக இந்த சிகிச்சைக்காக தயாரிக்கப்படும் மருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்துவது நன்மை தரும். கர்ப்பகாலத்தில் இன பெருக்க பகுதிகளில் எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ள கூடாது. ஆலிவ் இலை : ஆலிவ் இலைகளுக்கு கிருமியை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. ஆலிவ் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு பருகும் போது இந்த கிருமிகள் அழியும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு நாளில் 2-3 முறை இந்த டீயை பருகலாம். விளக்கெண்ணெய் : ½ ஸ்பூன் விளக்கெண்ணெய், ¼ ஸ்பூன் டி ட்ரீ ஆயில், ¼ ஸ்பூன் தூஜா ஆயில் மற்றும் வைட்டமின் E எண்ணெய் ஆகியவற்றை கலந்து ஒரு நாளில் 2-3 முறை மருக்களில் தடவ வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றம்: தகுந்த சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இருக்கும் போது தானாகவே இந்த மருக்கள் மறைந்திடும். மருந்துகளின் மூலம் அதனை அதிகமாக்குவதை விட அப்படியே விட்டு விடுவது சிறந்தது . இன உறுப்பு பகுதியை சுத்தமாக வைத்து கொள்வதும் அடிப்படை சுகாதாரமும் நல்ல மாற்றத்தை தரும். எப்போதும் உறுப்பு பகுதியை ஈரமாக வைக்காமல் இருப்பது நல்லது. இதனால் மேலும் தொற்றுகள் சேர்வது குறையும். இந்த HPV வைரஸை முற்றிலும் ஒழிக்க எந்த ஒரு முறையான சிகிச்சையும் இல்லை. சிகிச்சைகளின் மூலம் அந்த வைரஸின் தாக்கத்தை குறைக்கலாம். ஆரோக்கியமான உணவு பழக்கத்தாலும், உடற் பயிற்சியாலும் , வாழ்க்கை முறையாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி கிருமிகள் அண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்.