Home பாலியல் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும் 10 உணவு வகைகள்

பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும் 10 உணவு வகைகள்

67

குறிப்பிட்ட சில உணவு வகைகள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கலாம். தேவைப்படும் நாட்களில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆர்வத்தைத் தூண்டும் உணவு வகைகள் உங்களைக் கவர்ந்திழுக்கலாம், ஆனால் பிறகு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு நீங்கள் தான் அவதிப்படுவீர்கள்! நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாலியல் நலத்தை நேரடியாகப் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பாலியல் விருப்பத்தைக் குறைத்து, உங்கள் பாலியல் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் குறைப்பதில் நேரடிப் பங்களிக்கும் சில உணவு வகைகளின் பட்டியலை கீழே காணலாம்.

1. காபி:

ஒரு கப் காபி உங்களுக்கு புத்துணர்ச்சியையும் உடலுறவுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கலாம். நாளொன்றுக்கு 5 – 6 கப் காபி குடித்தால், உடலில் கார்ட்டிசால் அளவு உடனடியாக அதிகரிக்கும். இதனால் உடலில் மன அழுத்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து மூளைக்குச் செல்லும், இதனால் பாலியல் விருப்பம் குறையும், பாலியல் செயல்திறனும் குறையும்.

2. மது:

விறைப்புத்தன்மை அடையும் திறனை மது பாதிக்கலாம். இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாகும்போது, மூளையின் உணர்வு மற்றும் பார்வை வழியிலான தூண்டுதல்களை உணரும் திறன் மங்கும். இது ஆண் ஹார்மோன் (டெஸ்டோஸ்டிரோன்) உற்பத்தியில் குறுக்கீடு செய்து உடலுறவு நேரத்தைக் குறைக்கும்.

3. சீஸ்

ரசாயனங்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பால் பொருள்கள் உடலில் நச்சுப் பொருள்கள் உற்பத்தியைத் தூண்டலாம். சீஸ் என்பது அதிக கொழுப்புள்ள பால் பொருளாகும். இதனை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்பொருமல் (குதவழியாக காற்று பிரிதல்) உண்டாகலாம். இது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற இயற்கையான ஹார்மோன்கள் உற்பத்தியில் குறுக்கிடுகிறது.

4. புதினா

முத்தமிடுவதற்கு முன்பு கொஞ்சம் புதினாவை மென்று திண்பது முத்தத்திற்கு உதவலாம், ஆனால் அதற்கு மேல் அது நல்லதல்ல! புதினாவில் இருக்கும் மெந்தால், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கலாம். இதனால் அடிக்கடி ஏப்பம் வரலாம், அது உங்கள் இணையருக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். பல் துலக்குவதே போதும், நல்ல பலன் தரும். மெந்தால் குறைவாக இருக்கும் மின்ட் டீ அருந்தலாம்.

5. சோடா மற்றும் கோலா:

நுரை பொங்கும் பானங்களில் இருக்கும் அதிக சர்க்கரை நீரிழப்பு, பற்சொத்தை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பானங்களை அருந்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. இவற்றால் உடலுக்கு ஊட்டச்சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை.

6. பீன்ஸ்:

இடுப்பைக் குறைக்க முயற்சிக்கும்போது உங்கள் உணவில் பீன்ஸ் சேர்த்துக்கொள்வது நல்ல யோசனையாக இருக்கலாம். ஆனால் பீன்ஸில் வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தும் பொருள்கள் இருப்பதால், அதன் விளைவுகள் உங்கள் இணையருக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். இதில் இருக்கும் குறிப்பிட்ட வகை சர்க்கரை செரிமானமாகக் கடினமானது, அதனால் உங்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம்.

7. மீன்:

கூனிறாள் போன்ற குறிப்பிட்ட சில வகை கடல் உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல்நலத்திற்குத் தீங்கை விளைவிக்கலாம். கடல் உணவுகளில் இருக்கும் பாலிகுளோரிநேட்டட் பைஃபீனைல்கள் (PCBக்கள்) பெண்களின் பாலியல் விருப்பத்தை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடலாம். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுக்களில் இருந்து வெளிவரும் PCBக்கள் கடல்களில் கலக்கின்றன. இவை மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்.

8. பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் பாலியல் திறனை பெரிதும் பாதிக்கலாம். இது போன்ற துரித உணவுகளில் பதப்படுத்தும் ரசாயனங்கள், சோடியம் மற்றும் பிற கூடுதல் பொருள்கள் அதிகம் இருக்கும்.

9. மைக்ரோவேவில் தயாரிக்கக்கூடிய பாப்கான்:

திரைப்படம் பார்க்கும்போது உண்ணும் இந்த பாப்கான் வகைகள், மைக்ரோவேவ் அவனில் சூடாக்கக்கூடியவை. இவை எளிதில் பயன்படுத்தக்கூடிய பேப்பர் பைகளில் வைத்து வழங்கப்படுகின்றன. இந்தப் பைகளின் உட்புறத்தில் PFOA (பெர்ஃப்ளூரோஆக்டோனிக் அமிலம்) அல்லது PFOS (பெர்ஃப்ளூரோஆக்டேனசல்போனிக் அமிலம்) போன்ற பெர்ஃப்ளூரோல்கைல் அமிலங்கள் போன்ற வேதிப்பொருள்கள் பூசப்பட்டிருக்கும், இவை விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடியவையாகும்.

10. கேனில் பதப்படுத்திய உணவு

உடலுறவுக்கு முன்பாக, கேனில் பதப்படுத்திய உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவை மனநிலையை மோசமாக்கிவிடும். சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற பதப்படுத்தும் வேதிப்பொருள்கள் வயிற்றுப்பொருமலை ஏற்படுத்தும். கண்டிப்பாக அவசியம் எனில், உப்பின் விளைவை ரத்துசெய்ய, உணவை குறைந்தது 20 நிமிடம் வரை ஊறவைக்கவும்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைத் தவிர்ப்பது மொத்த உடல்நலத்திற்கும் நல்லது.

சரியான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதே அற்புதமான பாலியல் வாழ்க்கையை அடைவதற்கான முதல் படியாகும்!