பாலியல் கிருமிகள் முக்கியமாக கருப்பை, கருப்பைப் பாதை போன்றவற்றைத்தான் முதலில் தாக்கும். சிறுநீரகப்பாதை மற்றும் சிறுநீர் வெளியேறும் வழி, உடலுறவுப் பாதைக்கு மிக அருகில் இருப்பதால் இதன் வழியாக அக்கிருமிகள் உள்ளே சென்று சிறுநீர்ப்பையையும் தாக்கிவிடும்.
இதனுடைய அறிகுறிகள் பெரும்பாலும் மேற்சொல்லிய பொது தொற்றுக்கிருமிகளின் அறிகுறிகள்தான். பாலியல் கிருமிகள் முக்கியமாகச் சிறுநீர்ப்பாதையைக் குறுக்கிவிடுகிறது. எல்லா கிருமிகளும் சிறுநீரகத்தைப் பொறுத்தவரையில் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறது.
இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று மட்டும் ஏதோ காரணத்தால் செயல் இழந்தால், அது நோயாளிக்குப் பெருத்த அபாயத்தை உண்டுபண்ணுமா?
உண்டு பண்ணாது. மற்றொரு சிறுநீரகம் இதன் வேலையையும் எடுத்துக் கொள்ளும். இதுதான் சிறுநீரக மாற்று சிகிச்சையின் அடிப்படைக் கோட்பாடு!