பனிக் காலத்தில் முடி வறண்டு போவது, பொடுகு தொல்லை, முகத்தில் சருமம் வரண்டு போவது, கை-கால்கள் விரைத்து விடுவது, கால் பாதங்களில் வெடிப்பு போன்ற தொல்லைகள் நமக்கு வருகின்றன. இந்த பாதிப்பு வரமால் இருப்பதற்கு சில எளிய வழிகளை நாம் பின் பற்றினால் நம் உடலுக்கும், மனதுக்கும் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.
பனிக்காலத்தில் முடி வறண்டு போய், அதன் நுனி வெடித் திருக்கும். இதற்காக வருத்தப்பட வேண்டாம். டீப் கண்டீஷனிங் செய்தால் போதும். வறண்ட முடிகளுக்கு தேவையான டீப் கண்டீஷனிங் இப்போது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. முடிக்கு ஷாம்பு போட்டு கழுவிய பின் முடியை டவலால் துடைத்து காய வைக்கவும்.
சிறிதளவு கண்டீஷனரை தலையில் நன்றாக தேய்த்து கொள்ளவும். பிறகு முடி முழுவதையும் ஒன்றாக கட்டி வைக்கவும். பத்து நிமிடங்களுக்கு பிறகு முடியில் நிறைய தண்ணீரை கொண்டு கழுவிட்டு நன்றாக காய விடவும். இப்படிச் செய்யவதால் முடி வரண்டுபோவதை தடுக்க முடியும். பனிக்காலங்களில் பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் பனிக்காலங்களில் சருமத்தை வறண்டு போகச் செய்கிறது. அதனால்ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து முடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். பிறகு, வெந்நீரில் பிழிந்த துண்டினால் தலையில் ஆவி பிடிக்க வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு கழுவவும்.
இதனால் நல்ல பலன் கிடைக்கும். பனிக்காலங்களில் ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தி முகத்தைக் கழுவுவதனால் சருமம் மேலும் வறண்டு போகும். சாதாரண ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு பதிலாக மாய் ஸ்டரைசர் (ஙச்கூசூஞ்ஞிசுகூடிக்சு) அடங்கிய ஃபேஷ் வாஷ் உபயோகப்படுத்துவது நல்லது அல்லது கிளைன்ஸிங் மில்க் உபயோகப்படுத்தினால், முகம் கூடுதலாக வறண்டு போகாமல் தடுக்க முடியும்.