Home பாலியல் பதின் பருவத்தினருக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சனை

பதின் பருவத்தினருக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சனை

40

tamil health tips, tamil beauty tips, tamil health news, tamil maruthuvam, tamil tips maruthuvam, ask doctor tamil, tamil advice,

பதின்ம வயதை நெருங்கும் குழந்தை பல விஷயங்களில் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தை பருவத்தை அடைய உதவுவதற்காக, சில ஹார்மோன்கள் சுரப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் இதில் முக்கியமானவை. இந்தப் பருவம், மிகவும் சிக்கலானது, அவர்கள் இளம் பருவத்தை அடையத் துடித்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்களின் உடலும் மனமும் அந்த அளவுக்கு போதிய முதிர்ச்சி பெற்றிருக்காது. அவர்களின் நடத்தையும் மனநிலையும் எதிர்பார்க்காதபடி திடீர் திடீரென்று மாறக்கூடும், எல்லாம் ஹார்மோன்கள் செய்யும் கலகம்தான்!

பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சனை உள்ளது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? (How do I know that my teen is suffering from hormone imbalance?)
வளரிளம் பருவம் மிகவும் மென்மையானது, அந்தப் பருவத்தில் அவர்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும். சிறுவர்களுக்கு குரல் உடையும், மீசை தாடி முளைக்கும். இன்னும் பல மாற்றங்கள் நடக்கும். சிறுமியருக்கு மாதவிடாய் வரத் தொடங்கும், மார்பகங்கள் வளரும், இன்னும் பல மாற்றங்கள் நடக்கும். இந்த வளரும் பருவம் சீராகச் செல்ல வேண்டுமானால், அவர்களின் உடலில் ஹார்மோன்களின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். ஹார்மோன்களின் சமநிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பின்வரும் சில சில அறிகுறிகள் ஹார்மோன் சமநிலையின்மையைக் குறிக்கலாம், இவை தென்பட்டால் மருத்துவரிடம் செல்வது நல்லது:

காரணமின்றி ஏற்படும் திடீர் மனநிலை மாற்றங்கள்
பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள்
திடீர் எடை அதிகரிப்பு
குரலில் மாற்றம்
சிறுவர்களுக்கு மார்பகம் வளருதல்
அடிக்கடி தலைவலி வருவது
மன இறுக்கம்
குமட்டல்
முகப்பரு / படை
சைனஸ் பிரச்சனைகள்
முதுகு வலி
முரட்டுத்தனம்
ரோமங்கள் அதிகமாக வளருதல்
PCOS (சினைப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகள் தொகுப்பு)
இந்த அறிகுறிகள் ஏதேனும் குழந்தைகளுக்கு உள்ளதா எனக் கண்டறிந்து, அவற்றுக்கெல்லாம் அவர்களைத் திட்டிக்கொண்டு இருக்காமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது பெற்றோரின் கடமையாகும்.

ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள் (Causes of hormonal imbalance)
ஹார்மோன் சமநிலையின்மைக்கு பின்வருபவை காரணங்களாக இருக்கலாம்:

சுற்றுச்சூழல் காரணிகள் – சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுதல், மேக்கப் தயாரிப்புகளில் உள்ள வேதிப்பொருள்களால் பாதிக்கப்படுதல், தேவையற்ற நொறுக்குத்தீனி, புகையிலை, மது மற்றும் போதைப் பழக்கம் போன்றவை இளம் பருவத்தினருக்கு ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
உளவியல் காரணிகள் – பள்ளியில் கல்வி மற்றும் தேர்வுகளால் ஏற்படும் மன அழுத்தம், பிறரைப் போன்று செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஏற்படும் அழுத்தம், எதிர் பாலின ஈர்ப்பு, குடும்பத்தில் அமைதியற்ற சூழல் போன்ற பல காரணிகளும் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கக்கூடும்.
பொதுவாக இந்த ஹார்மோன் சமநிலையின்மை சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால், மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.

கண்டறிதல் (Diagnosis)
எந்தெந்த ஹார்மோன்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிவதற்காக, சில இரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

சிகிச்சை முறைகள் (Treatment options)
பரிசோதனை முடிவுகளை வைத்து, பின்வரும் சிகிச்சை முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

வாழ்க்கைமுறை மாற்றங்கள் – சுகாதாரம், போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவை பரிந்துரைக்கப்படும். பயன்படுத்தும் அழகுத் தயாரிப்புகளைக் குறைத்துக்கொள்ளுதல், போதுமான அளவு நன்றாகத் தூங்குதல் போன்றவை, ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளான முகப்பரு, PCOS மற்றும் பிற அறிகுறிகளையும் குறைக்க உதவலாம். மது அருந்துவதையும் புகைபிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.
மருந்துகள் – நாளமிலா சுரப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் சிகிச்சையையும் பிற மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.
Hormonal Imbalances in Teenagers

இந்த அறிகுறிகளைக் கவனிக்காமல், சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்:

இளம் பெண்களுக்கு PCOS பிரச்சனை இருந்தால், அதனால் குழந்தையின்மை, உடல் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இளம் வயதிலேயே கருவுறாமைக்கு வழிவகுக்கலாம், அதிக எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கருப்பை உள்ளுறைப் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும்.
முகப்பருப் பிரச்சனையைக் கவனிக்காமல் விட்டால், முகத்தில் தழும்புகள் உண்டாகலாம், இதனால் சுய மதிப்பீடு குறைதல், மன இறுக்கம் போன்ற பிற பிரச்சனைகள் உண்டாகலாம்.
ஆண்களில், உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகமானால், பிற்காலத்தில் அவர்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகலாம், பாலியல் விருப்பம் குறையலாம், இன்னும் சில பிரச்சனைகளும் ஏற்படலாம்.