Home பாலியல் படுக்கையறையில் மனைவி தயக்கம் இன்றி கணவரிடம் கூற வேண்டியவை

படுக்கையறையில் மனைவி தயக்கம் இன்றி கணவரிடம் கூற வேண்டியவை

25

9d4f18f9-9a85-4c5f-bbe3-f8a1e956ce33_S_secvpfஆண், பெண் இருபாலருக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும். உடலுறவு என்பது தம்பதி மத்தியில் பொதுவானது.

உங்கள் இருவரின் உலகமான படுக்கையறையில் தயக்கம் இன்றி கூற வேண்டியவற்றை வெளிப்படையாக உங்கள் துணையிடம்

கூறுங்கள். இதை வெளிப்படையாக கூறாமல் தீர்வுக் காண முடியாது.

உடலுறவு கொள்ளும் முறை, தீண்டுதல், ஆணுறை

பயன்படுத்துவது என எதுவாக இருந்தாலும் தயக்கம் இன்றி கூறுங்கள்.

உடலுறவு வைத்துக் கொள்ளும் நிலை (Position) உங்களுக்கு வலி ஏற்படுத்துவதாக இருந்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுங்கள்.

நீங்கள் கூறாமல் உங்கள் துணைக்கு இது தெரிய வாய்ப்புகள் குறைவு. இதில் தயக்கமோ, பயமோ கொள்வது தவறு. அனைவராலும்,

அனைத்து நிலையிலும் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது.

சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்களை தீண்டுதல் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.

சில ஆண்களின் தீண்டுதல் கூட வலி ஏற்பட

காரணமாக இருக்கலாம். இயற்கையாகவே பெண்களின் அங்கங்கள் மென்மையானவை என்பது புரிந்து ஆண்கள் நடந்துக் கொள்ள

வேண்டும். இவற்றை தயக்கமின்றி கூற வேண்டுவது அவசியம்.

பெரும்பாலும் அனைவருக்கும் அந்தரங்க இடங்களில் முத்தமிடுவது பிடிக்கும் என்று கூற முடியாது. பிடித்திருந்தால் கேட்டு பெறுவது

நல்லது.

சிலர் முழு இன்பம் பெறுவதற்காக ஆணுறையை தவிர்த்து கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உண்டு.

அதிகமான கருத்தடை

மாத்திரை பயன் பெண்களின் உடல் நலத்தை கெடுக்கிறது. எனவே, ஆணுறை பயன்படுத்த தயக்கமின்றி கூறுங்கள். இது பால்வினை

நோய் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

உடலுறவில் வேகமாக ஈடுபடுவது பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படவும், மிகுந்த வலியை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கிறது.

எனவே, அவ்வாறன தருணங்களில் உங்கள் துணையிடம் தயக்கமின்றி கூறிவிடுவது அவசியம்.

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு கொஞ்சி விளையாடுதல், உடலுறவில் அதிகப்படியான இன்பத்தை அனுபவிக்க உதவும். இது

பிடித்திருந்தால், உங்கள் துணைக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று தயக்கம் காட்டுவதை விட, கூறி புரிய வைத்து ஈடுபடலாம்.

சில ஆண்கள் மாதவிடாயின் இறுதி நாட்களில் கூட உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இது பெண்களுக்கு வலியை

ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்றவற்றை பெண்கள் தயக்கமின்றி கூற வேண்டும்.